யாழ் வர்த்தகக் கண்காட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”15ஆவது வருடமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் யாழ்ப்பாணம்...

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரிப்பு!!

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை...
Ad Widget

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (20) சிறுமிக்கு கடும் சுகவீனம்...

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது? நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் நீதிமன்றம் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன மீது...

யாழில் தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு: மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று காலை தொப்புள் கொடியுடன் சிசுவொன்றின் சடலம் மிதப்பதாக விவசாயிகள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த...

சாவகச்சேரியில் குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுடன்...

தமிழ் மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்-அமைச்சர் சந்திரசேகரன்!

யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைப்போம்!!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச்...

நகைக்கடைக் கொள்ளை- 2 இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது! |

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ...

பலத்த காற்றினால் பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள்

யாழ்ப்பாணம் - குருநகரில் நேற்றையதினம் (19) காலை வீசிய பலத்த காற்றினால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்ததுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் சென்ற யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சேத நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். இதேவேளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட...

அஸ்வேசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்!!

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு...

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி!!

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு பலர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை பொலிஸ் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ள பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்....

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் : உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பதில் பொறுப்பதிகாரி உறுதி

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிரேஸ்ர ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது 15ஆம் திகதி புதன்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்...

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்!

இரணைமடு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (16) காலை 9 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தலைமையில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், நீர்பாசன...

யாழில் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ். நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின்போது துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல் போன்றவற்றை வேலையில்லாப் பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னெடுத்தனர்....

பருத்தித்துறையில் NPP ஆதரவாளர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!!

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர். அதேநேரம், கொட்டடிப் பகுதியில்...

யாழில் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை சேர்ந்த முதியவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு...
Loading posts...

All posts loaded

No more posts