- Wednesday
- January 22nd, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 19, 21, 22, 23 மற்றும் 26 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்...
ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் உறுதியான சம்பள உயர்வு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சம்பள அதிகரிப்பு தொடர்பான முழு விபரங்களும் உள்ளடக்கப்படும் என தெரிவித்தார்....
நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு...
வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் தெரியவருகையில் - தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் "பி"...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான உண்மையான நிலையை...
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட...
பலாலி இராணுவ முகாமில் கடமையற்றி வந்த இராணுவ சார்ஜன்ட் மாரடைப்பால் நேற்று திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளார். குருநாகலையைச் சேர்ந்த ரங்கன திஸாநாயக்க 31 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, பலாலி இராணுவ முகாமில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரடைப்பு...
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள்...
யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91...
ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர்பச்சைகளையெல்லாம் தின்றுதீர்க்கும் இவை, உள;ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை...
2024 ஆம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறையாக 26 தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்ச விடுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த மாதத்தில் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 4 ஆகும். அதேநேரம், அடுத்தாண்டு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14...
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...
இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் நேற்று (19) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறையின்படி, எரிபொருள் ஆர்டருக்கு முந்தைய நாள்...
வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.) இவ்வாறு சுட்டுக் கொலை செய்துள்ளார். வைத்தியசாலையின் பிரேத அறையருகில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் காயமடைந்த நாய்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் 2024.12.11 ஆம் திகதி நடைபெற்ற...
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நேற்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். நேற்றுமுன்தினம் (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி...
க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் நேற்றையதினம் (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பான...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது...
Loading posts...
All posts loaded
No more posts