- Monday
- March 31st, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட...

இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. எனவே தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ்....

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை மேற்கொண்ட சந்தேகநபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை...

பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் இன்று (11)யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் இயக்க பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் எந்த...

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக தேவையின் அடிப்படையில் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங்கண்டு...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் திங்கட்கிழமை (10) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில்,...

மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய புலமைப்பரிசில் பரீட்சை செயல்முறையை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்ய அடுத்த ஆண்டு ஒரு நிபுணர் குழு...

வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே இதனைக் கருத வேண்டிவரும். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஏன் இந்த...

இலங்கை, தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன், “உலக சமாதானத்திற்கான மைத்திரி பாத யாத்திரை” பெப்ரவரி 07 அன்று திஸ்ஸஹாராம ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகி நேற்று முன்தினம் (08) யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரையை சென்றடைந்தது. கடற்படையின் பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன், இந்த பாத யாத்திரையில் வருகைத்தந்த பிக்குகள்...

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் மேற்படி கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, அங்கிருந்த...

”இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்” இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் நேற்று (06) மாலை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் முன்னுதாரணமான முறையில் இலங்கையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார்...

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, ஞாயிறு தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியர் ஆர். பாரதி ஆகியோரின் மறைவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் அனுதாபம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...

தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும்...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் தாக்கல் செய்த மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்....

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழாவும் கலைவிழாவும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பெண் தொழில் முனைவோரின் உள்ளூர் தயாரிப்புக்கள், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள், ஆடை , ஆபரணங்கள், கைவேலை அலங்கார பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் வடக்கு, கிழக்கு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,...

யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணிக்கு வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி...

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு...

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . குறித்த நபர், யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்த வந்த நிலையில், கடந்த மூன்று மாத காலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 41 வயதான இரு பிள்ளைகளின் தந்ததையே...

All posts loaded
No more posts