- Monday
- January 27th, 2025
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றது. சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றனர்....
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பொறுத்த வரையில்...
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (01) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் தீக்காயங்களுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் (20) அன்று இரவு நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன் போது, மேலதிக சிகிச்சைக்காக...
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார். பாராளுமன்ற...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்....
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் இன்று திங்கட்கிழமை (01) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின. இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில்...
வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதன் இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியில், வடமாகாணத்தில் மாபெரும் ஜுனியர் சுப்பர்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு...
விசர் நாய் கடி தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விலங்குகளின் விசர் ஏற்படுவது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. விசர் நாய் கடிக்கும் போது கட்டாயமாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும். விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார். அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் கடந்த புதன்கிழமை (26) உயிரிழந்தார். குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த நிலையில், தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் தஞ்சமடைந்துள்ளார். இதன்போது தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம்...
நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண...
நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, மர்ம நபர்கள் சிலரால் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே , புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள...
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அது...
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (26) முற்பகல் 11...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இதுவரை காலமும்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”சர்வதேச விசாரணையை தேவை. இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் எழுப்பியும், பதாகைகளையும் ஏந்தியவாறு...
Loading posts...
All posts loaded
No more posts