Ad Widget

மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை இன்று முதல் மீள ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும் குறித்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் 17ம் திகதி முதல் கப்பல்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும்...
Ad Widget

வெளிநாட்டில் உள்ளவரின் காணி உறுதியை ஈடு வைத்தவர் விளக்கமறியலில்!!

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை உள்நாட்டில் ஈடுவைத்து பணம் பெற்ற மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்துள்ளார். அந்த உறவினர் அக்காணி...

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

”வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்” என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த ஆளுநர், ”இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கு...

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று வியாழக்கிழமை (9) யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது. குறித்த முற்றுகையில் பருத்தித்துறை மற்றும் நீர்வேலி பிரதேசங்களைச் சேர்ந்த...

அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்...

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே தற்போது வெளிநாடுகளில் கூலிப்படை: சவேந்திர சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம்...

கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்!!

ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான...

யாழ்.போதனா குறித்து அவதூறு; இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!!

“சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக” யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகத் தெரிவித்து நபரொருவரினால் சில நாட்களுக்கு முன்னர்...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி!

தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த...

நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் பாதிப்பு!

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில்...

வடக்கில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்!

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்காக மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு குறித்த தகவல் வெளிக்கொணரப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் அரச...

வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள தாழமுக்கம்!!

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது எனவும், இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும்...

பேருந்து காப்பாளரின் நற்செயல்!! : குவியும் பாராட்டுக்கள்!!

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று(07.05.2024)ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை...

இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு!

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving...

வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு நோர்வே ஒத்துழைப்பு!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், ஆளுநரிடம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை...

அதிகரித்துள்ள வெப்பநிலை : வைத்தியர்கள் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா, ஹீட் ஸ்ட்ரோக் மூலம் வைத்தியசாலையின் விடுதிகளில்...

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த...

அதீத தொலைபேசிப் பாவனை : யாழில் தாயைக் கொலை செய்த மகன் வாக்குமூலம்!

தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை...

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமம்!

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு...
Loading posts...

All posts loaded

No more posts