- Sunday
- January 26th, 2025
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...
சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில் பொலிசாரால் தொடரப்பட்டது. இது தொடர்பான 3 முறைப்பாடுகளில் இன்றையதினம் (16.07.2024) வைத்தியர் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார். வழக்குகளின் அடிப்படையில் பிணை வழங்கி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு ...
வட மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (16) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடுரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது....
ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின்...
திருத்தப்பட்ட இரண்டாவது மின் கட்டண திருத்தம் மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் அதன்படி இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம்...
நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த யுவதியை வாகனமொன்றில் கடத்திச் சென்ற இளைஞர்கள், அவரை ஊர்காவற்துறையின் பிறிதொரு பகுதியில் இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞர்கள்...
பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் முதலாவதாக இன்று இடம்பெரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன்...
வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த தனியார் வாகனம் ஒன்று ஏ9 வீதியின்...
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஒஸ்ரியாவின் வியன்னா...
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு கௌரவ ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத் தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது....
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (09) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று செவ்வாய்க்கிழமை (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியேறினார். பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை...
Loading posts...
All posts loaded
No more posts