- Tuesday
- February 25th, 2025

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட...

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280...

புனரமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (19) கையளித்தார். நெடுந்தாரகை படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற...

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். யாழில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்களுடன்...

நாளை வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. செப்டெம்பர் 23 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும்...

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நீண்ட தூர சேவைகளுக்கென மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை தனியார் பயணிகள் பேரூந்து...

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள் திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்திலநேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவிருக்கும்...

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (17)மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்ற வேளையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச்...

சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய...

தமிழரசு கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள்!! ; அங்கஜன்
தமிழரசு கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள் இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் நிகவுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடாத்திய ஊடக சந்திப்பின்...

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்...

பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் சில மணி நேரங்களில் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் என்பவரே காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது...

“ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு பெப்ரல் அமைப்பினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், ருகுணு மற்றும் களனி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு...

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது....

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள்...

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த வீதியானது திறந்து வைக்கப்பட்டுள்ளது இந் நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மதகுருமார்,...

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் 15...

10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10) 3.00 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக்...

All posts loaded
No more posts