- Saturday
- March 29th, 2025

‘பட்டலந்த’ என்ற சொல்லின் ஊடாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம். தமிழர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையல்ல யென வாதிடும் நீங்கள் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை...

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், ஒதுக்கப்பட்டுள்ள நிதி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (19) ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர். வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும்,...

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை...

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளை முடிப்பதாக கூறி பணம்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ். தேர்தல் திணைக்களத்தில் நேற்று (17) கட்டுபணம் செலுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள...

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின்...

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைகளை மீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்படும் விகாரைகள் ஒரு பௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னம். பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலைமையுடன் கையாளக்கூடிய...

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கிராமசேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த கடந்த 08 ஆம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப்போராட்டம் இடம்பெற்றது. அத்துடன், கிராம உத்தியோகத்தர்களுக்கான...

முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின்...

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர். தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை சரிபார்ப்பு கடிதங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 15, 2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல்...

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன்,...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞனின் கைவிரல் துண்டாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், 3 இளைஞர்களை நேற்று (11) கைது...

All posts loaded
No more posts