- Tuesday
- February 25th, 2025

தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர்...

மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள்...

நான் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என சிலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நான் கடைசி வரை போராடுவேன். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல்...

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக்கோரியவர்கள் இவர்கள்தான். இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச்...

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்...

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக...

யாருக்கும் மதுபானசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன்....

சிறைச்சாலை எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் வைத்தியசர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தினை இன்றைய தினம் வியாழக்கிழமை செலுத்து வேட்புமனுவை பெற்று சென்றபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக...

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட், தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி.கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்....

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்கள்...

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று புதன்கிழமை (09) 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும் , படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர் ,...

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால்...

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது. நேற்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது...

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்டிருந்தார். மீட்கப்பட்ட...

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்...

All posts loaded
No more posts