ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி அழிவு ஆகவே இலங்கை தோற்றம் பெறும்; தமிழ்க் கூட்டமைப்பு எச்சரிக்கை

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி "அழிவு' ஆகவே இலங்கை தோற்றம் பெறும்....

மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்கள்

வாகன சாரதிகளுக்கு எதிராக மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வாகன சாரதிகளும், முன் ஆசனத்திலிருந்து பயணம் செய்பவர்களும் ஆசனப்பட்டியணியாது செல்லும் போது போக்குவரத்து காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதே இடத்தில் தண்டப்பண அறவீடு வழங்கப்பபடும், (more…)
Ad Widget

உங்கள் கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும்?;அரச வேலையற்ற பட்டதாரி டக்ளஸிடம் கேள்வி

ஊர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை கொண்டிருக்கும் கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும் ?ஈ.பி.டி.பி கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டதனாலாயே வடக்கில் அரச கட்சி மண் கவ்வ வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார் யாழ். மாவட்டத்திலுள்ள அரச வேலையற்ற பட்டதாரி ஒருவர். (more…)

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி யாழ்.அரச வேலையற்ற பட்டதாரிகள் மகஜர் கையளிப்பு

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அனுமதி வழங்குமாறு யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரியுள்ளது.இப்பட்டதாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஊர்வலம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். சுமார் 15,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள நிலையில் 300 பேர் வன்னி...

கலாமை அசத்திய வவுனியா இறம்பைக்குளம் ம.வி. மாணவிக்கு கௌரவம்!

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பிரயாகினி கணேஷலிங்கம் என்ற மாணவி, இந்திய குடியரசு தின நிகழ்வில் விசேட பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் கலாமிடம் கேள்வி கேட்டதுடன், அவர் அளித்த பதிலை அப்படியே மீண்டும் உடனேயே ஒப்புவித்து அவரது பாராட்டைப்...

யாழ். நகரில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

யாழ். நகரப் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.யாழ். நகரில் மருத்துவ கிளினிக் நிலையங்களை நடத்துபர்களில் சிலர் போலி வைத்தியர்கள் எனவும் இவர்கள் மருத்துவம் செய்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். (more…)

யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியை நிசாந்தன் இழந்தார்

சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பு: கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். கடலில் எல்லா இடங்களிலும் கொந்தளிப்பாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் மின்வெட்டு

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் 25ம், 26ம், 27ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறவித்துள்ளது.அதற்கமைய, 25ம், 27ம், 29ம் திகதிகளில் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடவாவடி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம்...

சம்பள முரண்பாட்டினை நீக்கக்கோரி பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஒரு நாள் போராட்டம் ஒன்றில் நாளைய தினம் ஈடுபடவுள்ளனர்.தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இந்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது....

யாழ். உள்ளூராட்சி திணைக்களத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ். மாவட்ட உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு எதிராக காணி, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு, கட்டிட அமைப்புக்கான அனுமதி கோரல், ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக தினமும் பல முறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். (more…)

கனவுகள் வளர்த்திடுவோமே பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பு

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். (more…)

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி!- அப்துல் கலாம் புகழாரம்

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி என்று யாழ்ப்பாணத்'திற்கு இன்று விஜயம் செய்துள்ள முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக்...

வட, கிழக்கிற்கான காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்....

இந்திய நிதியுதவியின் கீழ் மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளையும், துவிச்சக்கர வண்டிகளையும் பயனாளிகளிடம் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று கையளித்தார்.இதனடிப்படையில் அரியாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட 48 வீடுகளை மக்களிடம் கையளித்தார்.அத்துடன் யாழ்.நூலக முன்றலில் மாணவ மாணவியர் பலருக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்தார். (more…)

நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், தீவகத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் நிர்வாக அலுவலர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதைத் தொடர்ந்து அப்பதவிகளுக்கு உரியவர்களை நியமனம் செய்ய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தரம் ஒன்றைச் சேர்ந்த அலுவலர்களை பதில் நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கை...

அபிவிருத்திக் குழு கூட்டம் அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது

யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட் டம் நேற்று அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது.யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டம் நீண்ட காலங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம் பெற்றது.அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இணைத் தலைமையில் இந் தக் கூட்டம் இடம்...

சிவில் நிர்வாகத்தில் காணப்படும் தலையீடுகள் நீக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிவில் நிர்வாகத்தில் காணப்படும் படைத்தரப்பின் தலையீடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,...

பிரதேசசபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல்

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் கீரிமலை சேந்தான் குளம் பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி. வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சேந்தான்குளம் பகுதியிலுள் பற்றைகளை அழிப்பதற்கு...

யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி

யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியி ட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான துறைகளில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முதலீடு செய்து அதன்மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் பெறப்படும் இலாபம் புலிகளின் நிதிக்...
Loading posts...

All posts loaded

No more posts