- Monday
- April 7th, 2025
தற்போது யாழ். குடாநாட்டில் பாலியல் கல்வி செயற்திட்டம் கட்டய தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி வி.யோகஸ்வரன் தெரிவித்தார்.யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், (more…)

யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். (more…)

எல்லா மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான நல்லாட்சியை இலங்கை அரசு ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் விரும்பம் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெசபி யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர், யாழ். ஆயர் இல்லத்தில் செவ்வாய்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தர நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் (more…)

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். 1983 ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவில் தங்கியிருந்த இவரது மகன் எஸ்.சி.சந்திரகாசன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இலங்கை செல்ல முடிவெடுத்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர் செல்வநாயகம். இவரால் தொடங்கப்பட்ட பெடரல் கட்சி தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு பல போராட்டங்களை நடத்தியது....

வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச...

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (more…)

மின்சாரக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்தாததினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் காணப்படும் அதேவேளை, பணத் தொகையை செலுத்த மின்சார சபை வழங்கிய காலஅவகாசமும் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்புக்களை வழங்கும் இலங்கை மின்சார சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் கடந்த 8 மாதாகாலத்திற்கும் அதிகமாக மின்சார...

ஊழியர்களுக்கான சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும், போதியளவு பேரூந்துகள் இன்மையானலும், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சேவைகள் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய அலுவலகத்தினருக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாத்திற்கான சம்பள நிலுவைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. (more…)

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும்...

யாழ்.அரச அதிபரின் பாதுகாப்புக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரின் வாகனம் சங்குவேலிப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்.சங்குவேலிப் பகுதியில் அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமாரின் வாகனத்திற்குப் பின்னால் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சீவரெத்தினம் பாலதயாகரன் (புலிமாறன்) பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் இன்று திங்கட்கிழமை நிராகரித்தார். புலிகளின் சமாதன செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் சகோதரரான பாலதயாகரன், கடந்த 2009 மே 17ஆம் திகதி முள்ளிவாக்காலில் வைத்து இராணுவத்தினரால் கைது...

வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளைwww.doenets.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ்.கைதடியில் அன்னம்மா ஆலயத்திற்கருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து படையினர் பாரிய படைமுகாமொன்றை பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமைத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன..இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. (more…)

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர்கள் 40 வருடங்களுக்கு பின்பு வந்து யாழ். மாநாகர சபைக்கு சொந்தமான காணியை உரிமை கொண்டாடுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றம் சாட்டியுள்ளார்.யாழ். மாநாகர சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

"இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்'' எனத் தலைப்பிடப்பட்டுக் குடாநாட்டு அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கையெழுத்து இடுமாறுகோரி அனுப்பப்பட்ட மகஜர் அவர்கள் கையெழுத்திடாத நிலையில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.ஜெனிவாவில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்துப் பெறும் மகஜரே அது எனத் தெரிந்துகொண்ட அரச அலுவலர்கள் பலரும் அதில் கையெழுத்து...

யாழ். மவட்டத்தில் 38ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர் இவர்களுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் யாழ். அரச அதிபர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளானர்.யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாசார மற்றும்...

மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஹோமாகம, முல்லேகமவில் மகப்பேற்று மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல மேற்படி கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் (more…)

All posts loaded
No more posts