Ad Widget

நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு சபையை கைப்பற்றுவேன் இவ்வாறு சூளுரைத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களை அமைச்சர் டக்ளஸ் நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்...

எனது மரணச் சான்றிதழை தாருங்கள்; அரச அதிபரிடம் கோரிய பெண்மணி

"எனது மரணச் சான்றிதழை எனக்குப் பெற்றுத் தாருங்கள்" என்று உயிருடன் உள்ள ஒருவர் தன்னிடம் வந்து கோரியதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இந்த விநோதக் கோரிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;கொக்குவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலத்துக்கு முன்னர் சுவிஸ் சென்றுள்ளார். தற்போது அவர் தனது 6 பிள்ளைகளுடன் இங்குள்ள தனது...
Ad Widget

வடமராட்சியில் வாகன விபத்தில் இருவர் பலி

யாழ். வடமராட்சி கரணவாய் இமையாணன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வாகன சாரதி உட்பட இருவர் பலியானதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடும் மழை பெய்தது. இந்த  நிலையில் பருத்தித்துறையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிக்கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன்...

பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யாழ். வாசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன், யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.  (more…)

தமிழ்பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் உண்டு

வடமாகாணத்தில் சில பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது பௌத்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார். (more…)

பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலையின் அதிபர்கள்

பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலை அதிபர்களே பதவி வகிக்க வேண்டும் என வட மாகாணக் கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக குறித்த பாடசாலையின் அதிபர்களே இருக்க வேண்டும். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் நிதிச் செயற்பாடுகள் அரச...

தலைகீழாக நின்றாலும் கைதானோரை உடன் விடுவிக்க முடியாது; அவர்கள் போதை கடத்தல்காரர்கள் என்கிறார்- அமைச்சர் ராஜித

தமிழக மீனவர்கள் கூறுவது போல ஒரு தமிழக மீனவராவது இலங்கைச் சிறையில் இல்லை. அனைவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்தியர்களே இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் கே.பி.

யுத்தம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள போதும் யுத்தத்தால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் வாழ்வாதரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார்.தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். (more…)