யாழில் இராணுவத்தினரின் யுத்தவெற்றி நிகழ்வு!மாணவர்கள் படையினருக்கு சின்னம் சூட்டினர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார்...

யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் ‘சுகவாழ்வை நோக்கி’ மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். (more…)
Ad Widget

திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. (more…)

2012ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இடாப்புக்களை திருத்த ஏற்பாடு

2012ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான கலந்துரையாடல்கள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் இக்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்துள்ளார். (more…)

இந்த மாதத்துடன் வெளியேறுகிறது டனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு

யாழ்.மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், ஹலோட் ரஸ்ற் மற்றும் இராணுவத்தினரின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியன ஈடுபட்டு வந்தன. தொடர்ச்சியாக நிதிப் பற்றாக்குறைகள் இருப்பதன் காரணமாக டனிஷ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தனது பணியாளர்களைக் குறைத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்தும் இயங்க முடியாத இக்கட்டான...

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். (more…)

முதலாவது பெண் அரச அதிபராகி பெருமை சேர்த்தவர் இமெல்டா- அரச அதிகாரிகள் பலரும் பாராட்டு

யாழ். மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகப் பதவியேற்று, மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்று, தேசிய விருதுகளை வென்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்.இவ்வாறு திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், கணக்காளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் அவரை நேற்றுப் பாராட்டி வாழ்த்தினர். (more…)

யாழில் நடைபெற்ற அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருத்தரங்கு

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாண எம்.பிக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்

2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள...

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றலாம்

மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டு ள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகை யில் வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கான அனு மதியினை அரசாங்கம் வழங்கியுள் ளது என்று சுற்றாடல் துறை அமைச் சர் அநுர பிரியதர்­ன யாப்பா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். (more…)

“என்னுடைய இடமாற்றத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” : இமெல்டா சுகுமார் கவலை

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு இடமாற்றம் வரும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையென்று, கவலையுடன் யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

டக்ளஸுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. (more…)

யாழ்.அரச அதிபர் திடீர் இடமாற்றம்

யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவி உயர்வுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயலாளர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இவரது இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வவுனியாவுக்கு புதிய அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

பலாலியில் குடியமர்த்தாவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்; இடம் பெயர்ந்த மக்கள் எச்சரிக்கை

தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை...

தனியார் கல்வி நிலையங்கள் இனி மாலை 6 மணி வரையே; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர்

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேரக்கட்டுப்பாடு தொடர்பான கூட்டம் நேற்று யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மாநகர சபை முதல்வரும் தனியார் கல்வி உரிமையாளர்களும் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.கூட்டத்தில், கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் நேர ஒழுங்கில் வரையறை விதிக்கப்படுகிறது. இதன்படி...

சங்கங்களில் கோதுமைமாவின் நுகர்வு பெரும் வீழ்ச்சி , தீட்டல் பச்சை அரிசிக்கு மவுசு

கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது (more…)

போதனா வைத்தியசாலையில் ஊழியர் போன்று கொள்ளையர்; நோயாளர்களே! உங்கள் நகை கவனம் ஆஸ்பத்திரிப் பொலிஸார் எச்சரிக்கை

பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. (more…)

யாழ். மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக இதுவரை உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

தற்போது யாழில் பாலியல் கல்வி மிக அவசியமாகும்: வைத்தியர் யோகேஸ்வரன்

தற்போது யாழ். குடாநாட்டில் பாலியல் கல்வி செயற்திட்டம் கட்டய தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி வி.யோகஸ்வரன் தெரிவித்தார்.யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், (more…)

கிணற்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts