அரசாங்கம் வடக்கில் வெட்கங்கெட்ட கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது -மனோ கணேசன்

மக்களைக் காவல் காப்பதற்கு இருப்பதாக சொல்லிக்கொள்கிற துறையினரும், கண்ணுக்குப் புலனாகாத துறையினரும் தற்போது யாழ்ப்பாணத்தில் முழுநேர தொழிலாக கழிவு எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களைப் பயன்படுத்தி இன்று அரசாங்கம் வடக்கில் கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது. மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வு நடத்தும் இந்திய நிறுவனங்கள் இனிமேல் யாழ்ப்பாண நிலப்பரப்பிலும் எண்ணெய்...

யாழ்.நங்கை உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

யாழ். பண்ணை சுற்றுவட்டம், யாழ்.நங்கை உருவச் சிலையும் 18.06.2012 முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த அல்பிறட் துரையப்பாவின் நினைவாக இந்தச் சுற்றுவட்டம் புனரமைக்கப்பட்டு யாழ்.நங்கை உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென அல்பிறட் துரையப்பா குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒரு லட்சம் ரூபா நிதி...
Ad Widget

உணர்வுபூர்வமாக நடந்த வாழ்வுரிமைப்போராட்டம்! காவல்துறை அடாவடி!

இழுபறியில் வேம்படி மகளிர் கல்லூரி அதிபா் நியமனம்!

பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது.இருப்பினும் பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் தொடர்ந்து அதிபராக நியமனம் செய்யப்படவேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் தலையீட்டில் அவர் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து...

காணி சுவீகரிப்பிற்கு எதிராக தெல்லிப்பளையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கி விட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று (19) தெல்லிப்பளையிலும், தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்த போராட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

ஆலயங்களில் கடாக்கள் வெட்டிச் சரிப்பு இந்து மத அமைப்புக்கள் கடும் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் இதுவரை நான்கு ஆலயங்களில் சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆட்டுக் கடாக்கள் வேள்வி என்ற பெயரில் வெட்டிச் சரிக்கப்பட்டன.இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு இந்துமத அமைப்புக்கள் கோரி வருகின்றபோதும் சில ஆலயங்களின் நிர்வாக சபையினர் அதனைக் கேட்க மறுத்து தொடர்ந்து இந்தக் கொடும் செயலை ஈனச் செயலை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்பற்று, கவுணாவத்தை,...

யாழில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு. அடுத்தமுறை சிறை செல்லவும் தயார்?

வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து பொலிஸார் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.இன்று பிற்பகல் 1.00 மணியளில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு பொலிஸாரும், பெருமளவு இராணுவப்...

யாழ். வைத்திய நிபுணரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியோர் விரைவில் கைதுசெய்யபடுவர்

யாழ். போதனா வைத்தியாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரேரா தெரிவித்தார்.யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...

எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் – மாவை சேனாதிராசா

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான தலமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் கூறினார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,'எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம்...

வடக்கில் காணி சுவீகரிப்பா? முடியுமானால் நிரூபியுங்கள்! கோத்தா சவால்!

வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, "வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்'' என்றும் சவால் விடுத்தார். (more…)

முகமாலை பகுதியில் புலிகளின் அதியுச்ச போர் யுக்தி- வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ச்சி

முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. (more…)

மாவீரர்களின் படங்களை வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை – கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி !

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார். நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர்...

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. அந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் பங்குகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தனி ஈழம் கொடுப்பதற்குச் சமம்!?

தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும். வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தனி ஈழத்தை அமைப்பதற்கு மேற்குலகம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே, அரசு அதில் சிக்கக்கூடாது என்றும் அந்த...

வலி.வடக்கில் 8 ஆயிரம் ஏக்கர் கோருகிறது படைத்தரப்பு!

வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன. (more…)

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் அரசிற்கு 60 கோடி நஷ்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் அரசிற்கு 60 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 7வது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு தொடரப்படுவதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு சரியானதொரு தீர்வு காணப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)

வடக்கில் இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றுவது சாத்தியமில்லை; முன்னாள் இராணுவத் தளபதி

தவறான அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருக்கும் இந்த நாட்டினை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்கு எனது உயிரைத் தியாகம் செய்தாவது அந்தக் கடமையை நான் நிறைவேற்றுவேனே தவிர அரசாங்கத்துடன் நான் இணையமாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சிறையில் இருந்து விடுதலையாகிய இவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் வீடு மீது இன்று அதிகாலை தாக்குதல்; தேசத்துரோகியென அட்டையும் கொழுவினர்

யாழ்.வேம்படி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் இடமாற்றம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதுவரை காலமும் அதிபராகவிருந்தவரை மருதனார் மடம் இராமநாதன் கல்லூரிக்கு இடமாற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையினை அடுத்து நேற்றய தினம் மாணவிகள் பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர் (more…)

யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் மீளவும் புத்தெழுச்சி

மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.தொடக்க நிகழ்வில் சங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கெனத் தற்காலிக நிர்வாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts