பாடசாலைகளின் 2ஆம் தவணைக்கான விடுமுறை இன்று ஆரம்பம்

நாடளாவியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் இன்று  முதல் ஆரம்பமாகிறது.இன்றைய தினம் விடுமுறை விடப்படும் இப்பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.  (more…)

சமையலடுப்பு வெடித்ததால் எரி காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

சமையலடுப்பு வெடித்து சிதறியதால் எரியகாயங்களுக்குள்ளான இலக்காகிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சிவன்  கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர். (more…)
Ad Widget

வடக்குத் தேர்தல் பெப்ரவரி 26 இல்?

வடமாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பெப்ரவரி இறுதியில் அதாவது 26 அந்தத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது என தெரிகிறது.முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசு திட்டமிருந்தது ஆனபோதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பகுதியில் நடைபெற்றுள்ளதால்,அதற்கு முன்னர் இத் தேர்தலை நடத்துவதற்கு அரசு...

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் இடைநீக்கப்பட்டு தற்காலிகமாக அமைச்சுக்கு இடமாற்றம்

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர்   பணிப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளது நிரூபணமானதையடுத்து நீதியானதொரு விசாரணையினையினை மேற்கொள்ள வேண்டும் எனவே பணிப்பாளரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியில் இருந்து இடை நிறுத்த...

எதிர்வரும் 30ம் திகதி முதல் வடமாகாண மருத்துவ சேவைகள் பாதிப்புறும்?

யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மீதான விசாரணை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட மாகாணம் தழுவிய தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பக்கசார்பின்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துமாறு கோரி எதிர்வரும்...

நிமலரூபனி்ன் படுகொலை; கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் மேற்படி கண்டனத்...

பல்கலை. விரிவுரையாளர்களை பணிக்குத் திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் அழைப்பு

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வேலைக்கு சமூகமளிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலை விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். (more…)

இலவசக் கல்வியை இல்லாதொழிக்க அரசு முனைப்புடன் செயற்படுகிறது யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இந்த அரசு பொதுமக்களுக்குத் தெரியாமலேயே இலவசக் கல்வியை மாற்றி அமைக்கப் போகிறது. பல்கலைக்கழகக் கல்வி மட்டுமன்றி பாடசாலைக் கல்வியையும் பணம் கொடுத்தே பெற வேண்டிய நிலை இதன் மூலம் ஏற்படப் போகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதை பிரதான மார்க்கமாகக் கொண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான இருவர் யாழில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளியவளையைச் சேர்ந்த பாஸ்கரன் வனஜன் மற்றும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த பொன்னையா சிதம்பரநாதன் ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவார். (more…)

சிவாஜிலிங்கம் உட்பட்ட ஒன்பது பேரும் கடும் எச்சரிக்கைக்கு பின் விடுதலை

படையினர் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்களை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என சிவாஜிலிங்கம் குழுவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தி விடுதலை செய்துள்ளனர்.இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்க அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் 2 மணி நேரத்திற்கு மேல் காவல் நிலைய சிறைக்கூண்டில் அடைக்கப்பட்ட தாம் கடுமையாக எச்சரிக்கப்பட்டு...

விடுதலைப்புலிகள் இன்மையே மாணவர்கள் சீரழிவுக்கு காரணம்

விடுதலைப்புலிகள் தற்போது  இல்லாத நிலையிலேயே மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும்  சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர்கள் கல்வி வீழ்ச்சிக்கு காரணம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். (more…)

இலங்கை நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கான நேர்முகத்தேர்வுக்குஅழைக்கப்பட்டவர் விபரம் வெளியீடு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கான வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.அதனை இங்கே காணலாம் இவர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை பொதுநிர்வாக அமைச்சின் ஆட்சேர்ப்பு திணைக்கள இயக்குனர் திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ வுடன்  011-2681237    தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்புகொண்டு பெறமுடியும் .

இஸட் புள்ளியை ரத்து செய்யுமாறு யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2011ஆம் ஆண்டின் உயர்தர பெறுபேற்றின் இஸட் புள்ளியை ரத்து செய்யுமாறு உயர்தர மாணவர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி;.கனகராஜ் தெரிவித்துள்ளார்.கடந்த வருட உயர்தர பெறுபேற்றில் குளறுபடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் உயர்தர பெறுபேற்றிலும், இஸட் புள்ளிகளின் நம்பகத்தன்மையினாலும் குழப்பமடைந்துள்ளனர்....

யாழ். வைத்தியசாலை ஊழல், மோசடி தொடர்பான விசாரணையில் முடிவு எட்டப்படாவிடத்து நாடளாவிய ரீதியில் போராட்டம்

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அரச சொத்து ஊழல் தொடர்பான விசாரணையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் வடமாகாண வைத்தியசாலைகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் சுகாதார அமைச்சினால் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கப்படாவிட்டால் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடாத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தாய் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பா.சாய்நிரஞ்சன்...

இலங்கை சட்டக் கல்லூரிப் பரீட்சை ஓகஸ்ட் 12ஆம் திகதி;

இலங்கை சட்டக்கல்லூரி 2013ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் பரீட்சை விண்ணப்பத்தாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது.நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர். (more…)

மூன்று பாடங்களில் ஏ சித்தி பெற்றிருந்தும் பல்கலை செல்ல அனுமதியில்லை!- சஞ்சீவ பண்டார

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஏ சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் கல்வியில் உள்ள நியாயம் இதுதானா? என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.இஸட் புள்ளி வெளியிடப்பட்டதன் பின் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை ஏற்றுக்...

வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரினார் யாழ்.நீதிவான் மா.கணேசராஜா

உதயன் பத்திரிகை ஆசிரியரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா உயர்நீதிமன்றுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 17 ஆம் திகதியிட்டு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

யாழ். போதனா வைத்தியசாலையில் மோசடி மற்றும் நிர்வாக முரண்பாடு,வைத்தியர்கள் மீதாக அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்தப் போராட்டத்தில் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளனர். (more…)

அடியவர்களின் “அரோகரா” கோசத்துடன் நல்லுார்க் கந்தனின் கொடியேற்றம்

இன்று காலை 10 மணிக்கு ஆயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் கோலகலமாகவும் பக்தி பூர்வமாகவும் நல்லுார்க் கந்தன் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
Loading posts...

All posts loaded

No more posts