- Saturday
- November 23rd, 2024
பதவியைப் பொறுப்பேற்கையில் யாராவது குழப்பம் விளைவித்தால் அல்லது பதவியைப் பொறுப்பேற்க விடாது தடுத்தால் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் உதவியை உடன் நாடி பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோத்தபாய ஜெயரட்னே புதிய அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக வேணுகா சண்முகரத்தினம், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார். நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் இந்த...
வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப்...
கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தமது பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
நேற்று முதல் வெளிநாடுகளினை தளமாகக்கொண்டு புலம்பெயார் தமிழர்களால் நடாத்தப்படும் பிரபல தமிழ் இணையத்தளங்களான LankaSri.com Tamilwin.com Ponguthamil.com Athirvu.com Saritham.com Pathivu.com sankathi.com ஆகியன இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன.இனி இச்செய்தித்தளங்களினை இலங்கையின் இணைய சேவை நிறுவனங்களின் சேவை பெற்ற எவராலும் தமது கணினிகளில் சாதாரணமாக பார்வையிட முடியாது. ஏற்கனவே புலம்பெயர்ந்த சிங்களவர்களால் நடாத்தப்பட்ட பல(lankaenews ,lankanewsweb,srilankaguardian) இணையத்தளங்கள்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக உயர்கல்வி அமைச்சு, திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு அவசர தேவை உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தை அவசியம் எனவும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார். (more…)
2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு செய்து வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....
பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.மேலதிகமாக பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது....
பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை...
வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு மீளக்குடியமரப் போவதாக இடம்பெயர்ந்த மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களை நேற்று நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியிடமே மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன் அதற்கு தமது பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவியையும் கோரியுள்ளனர். (more…)
கிராம அலுவலர்கள் நாளாந்தம் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகத்தில் கடமையாற்ற வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் அலுவலகங்களுக்கு இந்த...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் 20 ஆவது நாளாக நாளையும் தொடருமென பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று தெரிவித்தது. இதேவேளை தொழில் ஆணையாளர் முன்னிலையில் நாளை 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்தது. நேற்று முன்தினம் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பல்கலைக்கழக மானியங்கள்...
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றும் தாம் எவ்விதமான பயமுறுத்தலுக்கும் அஞ்சி தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் பயமுறுத்தலுக்கு தான் பணியப் போவதில்லை என நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அந்தச்...
காணி அபகரிப்புக்கு எதிராக நடத்தவிருந்த ஒன்றுகூடலை நீதிமன்றம் தடுத்தமை தொடர்பான வழக்கில் அமைதியான முறையில் மக்கள் முன்னெடுக்கும் இவ்வாறான நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை.எனவே நீதிமன்றம் தனது தீர்ப்பை வாபஸ் பெற வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியதை அடுத்து அது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது....
யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு...
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி கடந்த 6ஆம் திகதியிலிருந்து சாத்வீக வழியில் போராடிவரும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க...
மக்களைக் காவல் காப்பதற்கு இருப்பதாக சொல்லிக்கொள்கிற துறையினரும், கண்ணுக்குப் புலனாகாத துறையினரும் தற்போது யாழ்ப்பாணத்தில் முழுநேர தொழிலாக கழிவு எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களைப் பயன்படுத்தி இன்று அரசாங்கம் வடக்கில் கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது. மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வு நடத்தும் இந்திய நிறுவனங்கள் இனிமேல் யாழ்ப்பாண நிலப்பரப்பிலும் எண்ணெய்...
யாழ். பண்ணை சுற்றுவட்டம், யாழ்.நங்கை உருவச் சிலையும் 18.06.2012 முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த அல்பிறட் துரையப்பாவின் நினைவாக இந்தச் சுற்றுவட்டம் புனரமைக்கப்பட்டு யாழ்.நங்கை உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென அல்பிறட் துரையப்பா குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒரு லட்சம் ரூபா நிதி...
பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது.இருப்பினும் பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் தொடர்ந்து அதிபராக நியமனம் செய்யப்படவேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் தலையீட்டில் அவர் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து...
இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கி விட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று (19) தெல்லிப்பளையிலும், தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்த போராட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts