ஜனாதிபதியினால் யாழிற்கான லக்ஸபான மின்சார திட்டம் இன்று ஆரம்பம்

யாழ். குடாநாட்டுக்கு தேசிய மின்சாரம் வழங்கும் திட்டத்தை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் 10.45 மணிக்கு கிளிநொச்சியில் ஆரம்பித்துவைத்தார். ஜப்பானின் கடன் உதவியின் மூலமாக செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து 238 மின் கம்பங்கள் மூலம் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட 132 கிலோவொட் தேசிய மின்சாரம் அங்கு அமைக்கப்பட்டுள்ள உப மின்...

வல்வையில் கடலரிப்பை தடுக்க அணை அமைத்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்

வல்வெட்டித்துறையில் பொது மக்கள் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.கடலரிப்பைத் தடுப்பதற்காக அணை அமைத்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீதே நேற்றுக் காலை பொலிஸார் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (more…)
Ad Widget

முஸ்லிம் மக்களை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம் அதன் விளைவை கூடிய விரைவில் அனுபவிப்பார்!- இரா.சம்பந்தன்

நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். (more…)

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (more…)

சம்பந்தனின் ‘தேசிய அரசு’ கருத்தில் எந்த முரண்பாடுமில்லை: மனோ கணேசன்

கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான்...

கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்

யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முற்பகல் 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள்...

நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை அபகரித்து முகாம் அமைக்க இராணுவம் முயற்சி!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண பூகோள வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்

வடமாகாண பூகோள வரைபடத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என இலங்கை நில அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாணத்திற்கு முழுமையான பூகோள வரைபடம் ஒன்று இருக்கவில்லை. தற்போது வடமாகாணத்தில் அபிவிருத்திகள் காணக்கூடியதாக இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பூகோள வரைபட திணைக்களமும் பங்களிப்பு செய்வதாகக் குறிப்பிட்டுள்ள, நில அளவைத் திணைக்களத்தின் நில...

தியாகி திலீபனின் நினைவுநாள் இன்று எழுச்சியுடன் ஆரம்பம்!!

தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன். (more…)

வடமாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்! செய்தியாளர்களிடம் ரொபேட் பிளேக்

2013 செப்டெம்பரில் வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் ரொபேட் ஒ பிளேக் தெரிவித்தார்.இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இன்று கொழும்பில் நடைபெற்ற...

மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு மக்கள், பா.உ மாவை.சேனாதிராசாவிடம் வேண்டுகோள்

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பலாலி மக்களை, நேற்று மாலை அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராசா சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பில் இராணுவம் விடுவிக்காத வலி. வடக்கு பகுதியில் மீண்டும் மண் அணை கட்டப்படுவதாகவும் அதனால் வீடுகள் காணிகள் சேதமடைவதாகும் மக்கள் முறையிட்டார்கள்.இதனை தடுத்தி நிறுத்தி தங்களை சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வழிவகை...

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு

யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் கட்சி என்ற ரீதியில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. (more…)

யாழில் பாகிஸ்தான் வேவுதளம் உள்ளதா? – மழுப்பினார் அமைச்சர் ஹெகலிய!

பாகிஸ்தான் புலனாய்வுத்துறை யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையமொன்றை நிறுவியுள்ளது என இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா அரசு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, (more…)

இன்று முதல் 2011, 2012 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள்

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று முதல் (14.09.2012) ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்படிவங்கள் இன்று முதல் எதிர்வரும் செப்ரம்பர் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

‘பிழைப்பை நடத்தவே உன்னிக்கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளார்’- இப்படிக்கூறுகிறார் டக்ளஸ்

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணத்தினுள் உட்பிரவேசிக்கும் வாகனச் சாரதிகளுக்கு புதிய அறிவித்தல்

வட மாகாண நுழைவாயிலினூடாக ஏ – 9 வீதியில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கான புதிய அறிவித்தலொன்றை வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா வெளியிட்டுள்ளார்.ஏ – 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சாரதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு ஒத்துழைக்க கூட்டமைப்பபு தயார்- சம்பந்தன் பச்சைக்கொடி

கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில்...

கல்லோடு கட்டி கிணற்றில் வீசப்பட்ட 2 சடலங்களால் வேலணையில் பரபரப்பு

யாழ்ப்பாணம் வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் உட்பட மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.குறித்த வைரவர் கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். (more…)

பட்டதாரிப் பயிலுநர்கள் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்கவும்; அரச அதிபர் அறிவிப்பு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நாளை தங்கள் கடமைகளை பொறுப்பேற்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆயிரம் பேர் வரையில் பட்டதாரிப் பயிலுநர்களாக சகல பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் தோறும் நியமிக்கப்பட்டனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts