- Saturday
- January 11th, 2025
யாழ் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் கணக்கியல்த்துறையின் தலைவரும் வணிக மாணவர் ஒன்றியத்தின் காப்பாளருமான திரு கே.கே.அருள்வேல் அவர்கள் வவுனியா வளாகத்தின் முதல்வராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் திங்கட்கிழமை ( 01 . 10 . 2012 ) தனது பொறுப்புக்களை ஏற்கிறார்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறும் என இலங்கையின் சிவில் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார். (more…)
கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் மாபெரும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். (more…)
கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்றுள்ளார் .வட மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது. (more…)
2012 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான டர்சிகா குகநேசன், சாம்பவி குகநேசன் ஆகியோரே அம்மாணவிகளாவர். (more…)
கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன் ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். (more…)
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு மகா வித்தியாலய மாணவி செல்வி சுரபி ரஞ்சித், புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.முதலிடத்தைப் பெற்ற மாணவி சுரபி ரஞ்சித் தனது பெறுபேறு தொடர்பில் கூறுகையில், (more…)
நடத்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதையடுத்து முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார். (more…)
பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. (more…)
ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பளம் 36 வீதத்தில் இருந்து 73 வீதம் வரையில் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண இன்று தெரிவித்துள்ளார். (more…)
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் கல்வி அமைச்சின் பிரதியமைச்சராக மோகன் லால் குரே நியமிக்கப்படவுள்ளார். (more…)
போரால் பாதிக்கப்பட்ட பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை, நிர்வாகக் கட்டமைப்புகளில் போதிய ஆளணி வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளையே எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். (more…)
2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளியைப்பெற்று சித்தியடைந்து அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தைபெற்றுள்ளார்.இவர் அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்; கட்டடக்கலைஞரான கனகசபேசன். ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார். (more…)
யாழ். திருநெல்வேலி பகுதியில் பாவனையற்ற வளவுக் கிணற்றிருந்து ஒரு தொகுதி ஆயுதங்களைப் படையினர் மீட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆயுதங்களை படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படல் வேண்டும் ௭ன்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்தளிப்பதற்கு அரசியலமைப்பில் ஒழுங்குவிதிகள் இல்லை ௭ன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். (more…)
2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும்...
பன்னாட்டு அழுத்தங்களிலிருந்து மஹிந்தவை காப்பாற்ற திரு சம்பந்தன் முற்படுகிறார் என்று குற்றம்சாட்டி திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களால் நீண்ட அறிக்கை ஒன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக்...
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த மெனிக் பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்களும் முகாமைவிட்டு வெளியேறிய நிலை யில், அந்த முகாம் மூடப்பட்டாலும், இலங்கை அரசு, நாட்டில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் முறையாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைக்கு விரைவில் உரிய தீர்வுகாணுமாறு ஐ.நா.மன்ற மனிதநேய அலு வலகம்...
இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை...
Loading posts...
All posts loaded
No more posts