இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணம்: அமைச்சர் ஜி.எல் புகழாரம்

'யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது' என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். (more…)

தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்தில் தீ விபத்து

யாழ். சட்டநாதர் கோயிலுக்கு அருகிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்திலுள்ள மின்னிணைப்பில் இன்று வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக யாழ். மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் தீவிரமாகப் பரவுகிறது டெங்கு: கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்

யாழ். மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக குருநகர், தெல்லிப்பளை, கொக்குவில் போன்ற பகுதிகளில் தீவரமான டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இவற்றில் குருநகர், தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களில் சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபை, பொதுமக்கள், ஏனைய நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினால் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. (more…)

‘அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்’ -ரஞ்சித் தேவசிறி

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து புதன்கிழமை வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்குமென கூறியுள்ளது. (more…)

காரசாரமான விவாதங்களுடன் களைகட்டிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்!

யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது. (more…)

கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி! மனமுடைந்த இரு இளைஞர்கள் தற்கொலை!

ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட பொழுதிலும், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. (more…)

பல்கலை விரிவுரையாளர்களது பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று இறுதி முடிவு

பகிஸ்கரிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலமாக நீடித்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினமே இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். (more…)

த.தே.கூட்டமைப்பு 13வது சட்டத் திருத்தத்தை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: இரா.சம்பந்தன்

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 வது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் திமுது ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வைத்து, முன்னணி சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தமக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தெரிவித்துள்ளார். (more…)

தற்போது அவசரகாலச் சட்டமோ பயங்கரவாத தடைச் சட்டமோ, நடைமுறையில் இல்லை என்பது தெரியுமா?- சரா எம்பி இராணுவத்துடன் தர்க்கம்!

வடபகுதியில் காணி சுவீகரிப்புத் தொடர்பாக, எந்த ஒரு விடயமும் வர்த்தமானியில் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அந்த விடயத்தில் பிரதேச சபைகள் மட்டுமன்றி வேறு எந்தத் தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு 51 ஆவது படையணியின் பிரிகேடியர் சன்ன குணவர்தன  தெரிவித்துள்ளார். (more…)

இலவச அமெரிக்க ‘கிறீன் கார்ட் விசா’ வுக்கு விண்ணப்பிக்கலாம்!

அமெரிக்க கிறீன் கார்ட் லொத்தர் எனப்படுகின்ற வருடாந்த இலவச அதிஸ்ட சீட்டிழுப்பு விசா திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பங்கள் 02.10.2012 முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது. www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக அமெரிக்க கிறின் காட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களில் இருந்த கிட்டத்தட்ட 55000 விண்ணப்பங்கள் கணினி மூலம் தெரிவுசெய்யப்படும். (more…)

பருத்தித்துறை வீதி இருபாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 2பேர் பலி 12 பேர் படுகாயம்(பட இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிப்புக்கு தமிழரசுக்கட்சி காரணம்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருக்கு எதிராக கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிகமாக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டமை, மற்றும் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். (more…)

வட மாகாணசபை சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது: மாவை சேனாதிராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்பதை வடக்கு மாகாண ஆளுநர் பிதிபலிக்க முடியாது. எனவே அவ்வாறு வடக்கு மாகாண சபையின் சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது என உத்தரவிடுங்கள் - இவ்வாறு கோரும் 'ரிட்' மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

யாழில் ரஞ்சித்தேவசிறி! போராட்டம் தொடரும் என சூளுரை!

இன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனைத்துப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி விஜயம் செய்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.தமது போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்தொடரும் எனவும் சூளுரைத்துள்ளார்! (more…)

திவிநெகும சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும்

மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், (more…)

யாழில் பௌத்தத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை: ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊடகங்கள் இராணுவத்தினர் பௌத்த மதத்தைப் பரப்புவதாகக் கூறி செய்திகளை திரிவுபடுத்திவருவதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.  (more…)

நலன்புரி நிலையத்தை மூடி மக்களை நடுக்காட்டில் விட்ட செயலை ஏற்றுக்கொள்ள முடியாது -ரதன்

வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா? ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும் ஒன்றா என வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம். ரதன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் – டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து! ஒருவர் பலி -ஆனையிறவில் அதிகாலை சம்பவம்

நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச் சம்பவம் ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.டிப்பர் வாகனச் சாரதியின் சடலம் இன்னும் அதே இடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts