பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக ஞானபிரகாசம்

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான ஐய்யாதுரை ஞானபிரகாசம் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வருடங்களாக கடமையாற்றும் இவர் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று முடங்கியது

சம்பள அதிகரிப்பு உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணிவரை இடம்பெறும் என அரச மருத்துவ சங்கத்தினர் யாழ். மாவட்டத்திற்கான தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார் (more…)
Ad Widget

வடமாகாண சபை அமைந்தால் தனி நாட்டுப் பிரகடனம் உறுதி என்கிறார் மேத்தானந்த தேரர்

வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். (more…)

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மறுக்கும் அவுஸ்திரேலியா

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடி வரும் தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது சட்டதிட்டங்களுக்கு அமைய ஏற்க மறுத்து வருகின்றது.மெல்பேர்னிலிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஒக்டோபர் 31ம் திகதி இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள் அகதிகளிடத்தில் கடைசி நேரத்தில் பல கேள்விகள் கேட்டு, சட்டதிட்டங்களுக்கு அமைவாக இல்லையெனின் திருப்பி அனுப்பி விடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்....

இறைவரி திணைக்களத்தில் ஊழல்!- இரகசிய பொலிஸார் விசாரணை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இலங்கைகான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர். (more…)

போலி கம்பனியுடன் மீள் காப்புறுதி; இ.கா.கூ.வுக்கு ரூ.208 மில்லியன் நட்டம்

போலியான கம்பனி ஒன்றுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் செய்துகொண்ட மீள் காப்புறுதி காரணமாக அதற்கு 208 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்திருக்கின்றார். கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அறிக்கையை அரசாங்க நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) நேற்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்தது. (more…)

யாழ்.வரணி மக்களை நோக்கி துப்பாக்கி சூடு: இனந்தெரியா நபரின் அட்டகாசத்தால் பெரும் பதற்றம்- இராணுவம் குவிப்பு

யாழ்.வரணிப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)

யாழ். தொலைபேசி விற்பனை நிலைய கொள்ளையுடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் நேற்று கைது!

யாழ்.குடாநாட்டில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ். பொலிஸார் இதுவரை 400 கைத்தொலைபேசிகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் நாவலர் வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்று இரண்டு தடவைகளும், நல்லூரடியிலுள்ள கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் மூன்று தடவைகளும் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. (more…)

சுன்னாகத்திலுள்ள குடிநீர்க் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலப்பு

யாழ். சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் புகுவதினால் சுத்தமான குடி நீரைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக கழிவு ஒயில் கிணறுகளில் புகுவது சம்பந்தமாக பிரதேச சபை, பிரதேச செயலகம், பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனை உட்பட பல இடங்களில்...

அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கு ௭வ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்காகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அனைத்து காய்நகர்த்தல்களையும் முன்னெடுக்கின்றார்.என அவ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். (more…)

27ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்

முஸ்லிம்களின் ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி எதிர்வரும் 27ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

கிணறுகளுக்கு வரி

புதிதாக சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். (more…)

கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் உயர்வு

யாழ். மாவட்டத்தில் பிறிமா கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிறிமா கோதுமை மா நேற்றுமுன்தினம் முதல் 85ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (more…)

கோத்தாவுக்கு எதிராக மாதகல் பொதுமக்கள் உயர் நீதிமன்றில் மனு!

வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். (more…)

வட மாகாண சபையின் கருத்தை ஆளுநர் வெளியிட முடியுமா? ஒக்டோபர் 22 இல் பரிசீலனை

கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வட மாகாண சபையின் ஆளுனரால் வெளியிடப்படும் கருத்துகள் அந்த மாகாண சபையினால் வெளியிடப்படும் உண்மையான கருத்துகளாகுமா என்பது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் பரிசீலனைக்கு எடுக்கும். (more…)

நல்லூர் பிரதேச சபை தலைவர் வசந்தகுமார் மீது தாக்குதல்

நல்லூர் பிரதேச சபையின் தலைவர் எஸ்.வசந்தகுமார் மீது சற்று முன்னர் இனம்தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தோல்வியில் முடிவடைந்த பல்கலைக்கழங்கள் ஆசிரியர் போராட்டம். இன்றுமுதல் கடமைக்கு திரும்புகின்றனர்!

இன்று பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளபோதிலும், சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்மொழிவுகள் போதியவையல்லவெனவும் அரசாங்கம் தமது மனத்தாங்கல்களை கவனிக்கும்வரை அதன் போராட்டம் தொடருமெனவும் பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. (more…)

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதமர்! அழுத்தம் கொடுக்குமாறு எம்.பிக்கள் ௭டுத்துரைப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்மைப்பு இடம்பெற்றால் ஏமாற்றப்படுவது உறுதியாகும். (more…)

இராணுவத்தின் தனியார் காணி சுவீகரிப்பு விடயம் ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்

பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts