- Sunday
- January 12th, 2025
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)
இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் மூன்றாவது கிளை அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என அதன் பிராந்திய இணைப்பாளர் ஸ் ரீபன் ரோமன் தெரிவித்தார். (more…)
சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சாராயப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. வைத்தியசாலை ஆண்கள் விடுதியில் உள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்றவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தர் அதுகுறித்து வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டனர். (more…)
பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி தெரிவித்தார். (more…)
தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)
அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார். (more…)
சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா. (more…)
வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். (more…)
அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டும் கடலட்டை பிடிக்கலாம் என்று அத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)
யாழ் போதானா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்குத் தேவையான இராசாயனப் பொருட்கள் பற்றக்குறையாகக் காணப்படுவதால் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்திசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தாரஜா தெரிவித்துள்ளார். (more…)
கூடங்குளம் அணு உலை பாடங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதற்கு எதிராக பேதமின்றி ஒன்றிணைவோம் என கூடங்குளத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)
பருத்தித்துறை பிரதேசசபை குடத்தனை உப அலுவலகம் 13 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அம்பனில் கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts