- Sunday
- January 12th, 2025
யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி நேற்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். (more…)
பிரதான வீதிகளின் அகலிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவற்றைத் தடுப்பதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (more…)
விசேட தேவையுடையோரின் இன்னல்கள், இடையூறுகளை எடுத்துக்கூறி எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்ற எம்முடன் கைகோர்த்து நின்று செயற்படுங்கள். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் வி.கனகசபை இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். (more…)
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினை பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி மாணவர்களது கற்றல் நடவடிக்கைக்கு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவிற்கும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று பலாலியில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருடைய விடுதலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாளை நடத்தவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது. நாளை பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில்...
யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டும் கண்டன போராட்டம் தற்பொழுது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)
பளை பொலிஸ் சோதனை நிலையம் இந்த மாத இறுதிக்குள் பொலிஸ் நிலையமாக செயற்படவுள்ளது. இதுவரை காலமும் பொலிஸ் கனிஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்) தலைமையில் 10 பேருடன் இயங்கிவந்த பொலிஸ் சோதனை நிலையம் விரைவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 80 உத்தியோகத்தர்களுடன் முழுமையான பொலிஸ் நிலையமாக இயங்கவுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. (more…)
பல்கலைக்கழக சூழலில் படையினரின் பிரசன்னம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.பல்கலைக்கழகம் மற்றும் விடுதிச் சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதனால் விடுதியில் உள்ள மாணவர் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளது. (more…)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4பேர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை நிறுத்தல் வேண்டுமென யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரை கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் நேற்றைய தினமும் இன்றும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களான தர்ஷானந், தர்ஷன், ஜெகத்மேனன், சொலமன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை அனைத்து பீட மாணவர்களும் கால...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்.இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது.ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் உள்ளிட்டயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதே இவர்கள் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு ஆகும். இது தொடர்பிலேயே கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வன்முறை பதட்டநிலை நிலவியது. (more…)
அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? என யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை மீது எதிர்க்கட்சித்தலைவர்...
Loading posts...
All posts loaded
No more posts