- Sunday
- January 12th, 2025
இம்மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தேசிய சுகாதார வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில் இந்த தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
யாழில் நேற்று கைதுசெய்யப்பட்ட 10 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என்றும், இவர்கள் 10 பேரும் யாழ். குடாநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். (more…)
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கோரப்பட்ட 9 மாணவர்களை விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் சற்றுமுன்னர் பெற்றோரால் பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைத்தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.துணை வேந்தர் விடுமுறையில் உள்ளதால் பதில் துணைவேந்தராக கடமையாற்றுகின்ற பேராசிரியர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் மாணவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.. (more…)
பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளே பின்பற்றி வருவதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரியவருகின்றது.இவர்களது பெயர்ப்பட்டியலை துணைவேந்தருக்கு அனுப்பியிரு்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலிருந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் குவிந்து வருகின்றன. (more…)
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகள் யாவும் புதன்கிழமை முதல் புல்லுக்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்காவை நவீனமுறையில் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.12.2012) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. (more…)
யாழ்ப்பாணத்தில் எவ்வித அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். (more…)
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில்போராட்டம் நடத்தினர். இது அங்கு சுமுகமான நிலை இல்லை என்பதற்காக,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)
வடமராட்சி அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் யாழ். அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். (more…)
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடியுள்ளனர். (more…)
எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறீலங்கா பயங்கரவாத தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐநாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts