வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை அடுத்த ஆண்டு முதல் அமுல்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

நெடுந்தீவில் கட்டுமானப் பணிகளுக்கு வெளியிடங்களில் இருந்து பொருள்கள்; துறைமுகத்தில் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி

நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. (more…)
Ad Widget

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)

இராணுவத்தில் வடக்கு இளைஞர்களும் விரைவில் இணைக்கப்படுவர்; ருவான் வனிகசூரிய தெரிவிப்பு

வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை (more…)

இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன; யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கையில் 35 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு நோய் என்பவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றுக்கு தற்கால வாழ்க்கை முறை, சுகாதாரமான ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகள் இல்லாமை என்பன சாதகமாக அமைந்துவிடுகின்றன. (more…)

சிவில், அரசியல் உரிமைகள் குறித்து வியாழனன்று கலந்துரையாடல்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையினால் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (more…)

கைதானவர்கள் குறித்து இதுவரை 20 முறைப்பாடுகள்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கள் வரை 20 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

மாணவர் பிரதிநிதிகள் நால்வர் வெலிக்கந்தைக்கு திடீர் மாற்றம்

கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். (more…)

யாழ். குடாநாட்டில் கிராமசேவையாளர்கள் ஊடாக விசாரணைக்கென அழைப்பு விடுத்து தொடரும் கைதுகள்

யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. (more…)

யாழில் கைக்குண்டு வீச்சு

யாழ், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். நிசாந்தனின் வீட்டை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசியுள்ளனர். (more…)

உள்ளூராட்சி சபை ஊழியர் பலருக்கு இன்னும் இல்லை ஓய்வூதிய இலக்கம்; பல குடும்பங்கள் வருமானம் இன்றி அவதி

வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றி இளைப்பாறிய பலருக்கு இன்னமும் விதவை, அநாதைகள் ஓய்வூதிய நிதி இலக்கம் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வட பகுதி சட்டத்தரணிகள் தீர்மானம்

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தமது எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் வட பகுதி சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)

மீனவர்களின் வாழ்வுரிமைக்காக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்தில்கொண்டு 'போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு' இன் தலைவர் வி.சகாதேவன் 'எமது மீனவர்களின் வாழ்வுரிமைக்காக' என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சி.ஐ.டியால் 3மணிநேரம் விசாரணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. (more…)

விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்தார். (more…)

தமிழ் பேசும் மக்களின் வாழ்வைக் கட்டியயழுப்ப இலங்கை அரசின் விசேட நிதி ஒதுக்கீடு தேவை; மாவை. சேனாதிராசா வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டி யெழுப்புவதற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. (more…)

மாதகலில் விபத்து இளைஞர் சாவு

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து மாதகலில் சனிக்கிழமை முற் பகல் இடம்பெற்றது. (more…)

புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது

யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts