- Monday
- January 13th, 2025
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் அனுஷ;டிக்கப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. (more…)
மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்திற்கொண்டு 2 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனினால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. (more…)
கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் வழக்கு விசாரணைகளை 2013 ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை (more…)
கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுதலைச்செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிப்பதற்காக தடுத்து வைக்கப்படவுள்ளதால், (more…)
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர். (more…)
லொறி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் ஏ9 வீதிக்கும் எழுதுமட்டு வாழ் சந்திக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுமட்டுவாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுத்துரை பாலசுப் பிரமணியம் (வயது 27) இந்த விபத்தில் (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதானதையடுத்து விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளுக்கு படைப் புலனாய்வுப்பிரிவினர் சென்று அவர்களை விசாரணை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் நேற்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட கிரிட் லேச்சேன், (more…)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்துவதால் நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். (more…)
35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமையால் அதற்கு அருகிலுள்ள கோயில் காணியில் புதிய மயானத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா தெரிவித்தார். (more…)
தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் வாகனங்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும்.பயணிகளின் பயணத்துக்கு தகுந்த முறையில் இல்லாது பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வாகன வழி அனுமதிப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது. (more…)
மரங்கள் மற்றும் தடிகள் அடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பாலத்தினூடாக நெடுங்கேணியிலிருந்து சேனைப்புலவு செல்லும் மக்கள் தினமும் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று யாழ்.மாவட்டக் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். (more…)
தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். (more…)
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதித் தூதுவர் ஸ்ரீ.பி.குமரன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி செயலாளர் பி.எஸ்.ராகவன் உட்பட பலர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். (more…)
மேற்குல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியமையை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளன.குறித்த பறவைகள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்துள்ளன. (more…)
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts