- Monday
- January 13th, 2025
வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், (more…)
பஸ்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.மிக வேகமாகச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் வீதிப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளன. (more…)
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், (more…)
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுகளின் ஒரு பாகமாக (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் என்பவரின் நல்லூரடியிலுள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. (more…)
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் (more…)
சுன்னாகம் பகுதி வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதனால் வயிற்றின் சிறுபகுதி கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி இன்று தெரிவித்தார். (more…)
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் 149 ரூபாவாக இருந்த பெற்றொல் புதிய விலையின் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் (ஒக்டெயின் 90) விலை 159 ரூபா ஆகும் (more…)
2013 ஆம் ஆண்டு 25 பட்டதாரிகளுக்கு மீன்பிடி பரிசோதகர்களுக்கான நியமனத்தினை கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஐஸ்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்டு (more…)
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் வடமாகாண ஆளுநரினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாகாண கல்வி அமைச்சினால் யாழ். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பெயர் பட்டியலில் (more…)
"சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின்நிலையம் ஜனவரி மாதம் இயக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட சில இடங்களிற்கு மின்விநியோகம் தடைப்படும்" என்று யாழ் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (more…)
வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் (more…)
முச்சக்கரவண்டியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)
வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார். (more…)
யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (இன்று), இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts