- Monday
- January 13th, 2025
காரைநகர் கசூரினா கடற்கரையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் நிதர்சன் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (more…)
பருத்தித்துறை பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் தலைமையில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. (more…)
யாழ் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் சரியான புள்ளி விபரங்களைப் பெறுவதற்கு முடியாது உள்ளதாக தேவை நாடும் மகளீர் அமைப்பின் கொழும்பு அலுவலக செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.தேவை நாடும் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைகள் தொடர்பிலான ஊடகவியலாளர் கலந்துரையாடல் (more…)
இணுவில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டத்தாக கூறப்படும் இளைஞன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். (more…)
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பால்நிலை வன்முறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் (more…)
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 14 ஆம், 15 ஆம் திகதிகளிலும் யாழ். குடாநாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இவர்களின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (more…)
யாழ். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்களின் வாள் வீச்சிற்கு உள்ளாகி இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியின் இராமசாமிப் பரியாரியார் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது. (more…)
வாகன விபத்தில் இளைஞன் பலி யாழ்ப்பாணம், அரியாலை, தபால்பெட்டிச் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்க்த திவாகரன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (more…)
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான், மயிலங்காடு பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த 48 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் மண்வெட்டியில் அடிபட்டே இந்த மர்மப் பொருள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வடக்கு மாகாணம் 34 உள்ளூராட்சி சபைகளைக் கொண்ட பெரிய பிரதேசம். இந்த நிலையில் யாழ்.மாநகர சபை ஆசிய மன்றத்தின் அனுசரணை, ஆலோசனையுடன் முதன்முதலாக பங்கேற்பு ரீதியான அபிவிருத்தித் திட்டத்தை 47 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ளது. (more…)
தற்போதைய யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா யாழ். மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று காலை 6.30 மணியளவில் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன. (more…)
இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக, பல்கலைகக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் (more…)
வானில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாட்களில், வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம் என ஆதர் சீ கிளாக் மத்திய நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.வானில் ஏற்படும் மாற்றத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும் இதன் காரணமாக பார்வை கோளாறு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது (more…)
யாழ். மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணபட்டிருந்த சிலர் கடந்த ஒரு சில தினங்களில் கடத்தப்பட்டும், காணாமல்போயுமிருப்பதாக தெரியவருகின்றது.கடந்த சில வருடங்களாக மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குழுக்கள் பொலிஸாரினதும், (more…)
பாடசாலை மாணவர்களுக்கு தினமும் இடம்பெறும் காலைப் பிரார்த்தனையின்போது போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பில் எடுத்துக் கூறவேண்டும். வீதி விழிப்புணர்வு பற்றிய எதிர்கால நலன்கருதி பாடசாலை அதிபர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி தெரிவித்தார். (more…)
புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை உரிமை மீறல் (more…)
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றுவதற்கும் வணக்கம் செலுத்துவதையும் யாரும் தடைபோடமுடியாது..யாழ். மாநகர சபையின் 'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் குறிப்பிட்டார். (more…)
பதிவு செய்யப்பட்ட 618 முச்சக்கரவண்டிகளிற்கும் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் 2013 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முச்சக்கரவண்டி சங்க தலைவர் எட்வேட் போல் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ். தம்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts