- Wednesday
- January 15th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக யாழ் நகரையொட்டிய கரையோர மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை, காக்கைதீவு, வசந்தபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். (more…)
டில்லியில் ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழிந்துள்ளார்.கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த மேற்படி மாணவி, இன்று அதிகாலை 2.15 மணியளவில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரும் பிரபல வெர்த்தகருமான துவாரகேஸ்வரன் மீது சற்றுமுன் யாழ்.நல்லூர் ஆலய பகுதியில் அசிற்(அமில) வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;அசிற் வீசப்பட்ட நிலையில் காயமடைந்த துவாரகேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
காரைநகர் ஈழத்துச் சிதம்பர தீர்த்த உற்சவத்தின் போது நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த ஒருவர் இடைவழியில் மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவர் மயக்கமடைந்தள்ளார். (more…)
யாழ்.மாதகல் பகுதியில் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி மீனவர்கள் பயணித்த இழுவை படகானது மாதகல் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலே இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.நடராஜா கலியுகராஜா (வயது 47) என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.4 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மண்டைத்தீவைச்சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுரேந்திரன் சுதந்தினி என்பவரே புதன் கிழமை காணாமல் போனதாகவும் அவரே (more…)
யுத்தத்தின் அதிர்வுகளில் இருந்து தமிழர்கள் விடுபடுவதற்கும் யுத்த பாதிப்புகளில் இருந்து மக்களை நல்வழிப்படுத்தவுமே தமிழ் பௌத்த அறநெறிப் பாடசாலை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதே தவிர பௌத்த மதத்தை பரப்புவதற்காக அல்ல. பௌத்த மதத்தில் உள்ள தர்ம சிந்தனைகளை அங்குள்ள மாணவர்களும் அறிந்து கொள்வதற்கே (more…)
புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். இவ் வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் பி.திருமாறன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் (more…)
தமிழ்துறை மற்றும் சமூக துறையில் முடங்கி கிடக்கின்றன நிதிகளை பயன்படுத்துவதற்கும், துறைசார்ந்த பட்டதாரிகளை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கிகாரத்தினை பெற்றுத் தருமாறு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுததார். பட்டதாரி பியிலுனர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொறன்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். (more…)
யாழில். மார்கழி மாத மழைவீழ்ச்சி குறைவாக காணப்பட்டுவந்தநிலையில், பெரும் போகத்திற்கு விதைக்கப்பட்ட நெற் பயிர்கள் அழிவடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு பெய்த கடும் மழையை அடுத்து வயல் நிலங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
யாழில் அதிகரித்துவரும் தாய் சேய் குழந்தை மரணம் தொடர்பான விசாரணைகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள படாத நிலையில் யாழ். நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி தெரிவித்தார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் காது,மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் மீது வாள் வெட்டு மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)
Loading posts...
All posts loaded
No more posts