- Wednesday
- January 15th, 2025
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடியிடமும் வாய்முறைப்பாடு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)
தீக்காயங்களுக்குள்ளான இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இவ்விளைஞர் (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே (more…)
காஸ் நிறுவனங்கள் காஸ் விலையை 650 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் காஸ் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கும். என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் (more…)
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் 10 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். (more…)
வடமாகாண மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் 3 வருடங்களின் பின்னர் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த முதலாம் திகதி தொடக்கம் சுழற்சி முறையிலான இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகக் கடமையாற்றிய என்.சோதிநாதன் திருகோணமலை மதுவரித் திணைக்கள அத்தியட்சகராகவும், (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயக்குமாரை அச்சுறுத்தும் விதமாக அவரது வீட்டின் முன்னால் இரு மர்ம நபர்கள் நடமாடியதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மருத்துவ நிபுணரின் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக (more…)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)
இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன.வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. (more…)
தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள உயர் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருத்து தெரிவிக்கையில், (more…)
யாழ். நகரத்தில் வைத்திசாலை வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடங்களை அகற்றி அவற்றை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு யாழ். மாநகர சபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பெரும்பாலும் யாழ். வைத்தியசாலை வீதியில் பெருமளவு வாகனத் தரிப்பிடங்கள் காணப்பட்டு வருகின்றது (more…)
நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். (more…)
இலங்கைக்கு அண்மையில் விட்டுவிட்டு வீசும் கிழக்கு நோக்கிய காற்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முகில் மூடிய வானம் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . (more…)
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக வடமாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்ட விசேட இடமாற்ற சபையின் கூட்டம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)
யாழ். கொடிகாமம், புத்தூர்ச் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பரஹவத்த அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். (more…)
பல்கலைக்கழகங்களின் இராணுவ மயமாக்கலைத் தடுத்து நிறுத்த என்ன விலை கொடுக்கவேனும் தயாராக உள்ளோம். யாழ். பல்கலையில் அத்துமீறி செயற்பட்ட இராணுவத்தைக் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் ஒன்றியம் நடத்திய துண்டுப் பிரசுரப் போராட்டத்தின் போது அதன் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார். (more…)
வல்வெட்டித்துறையின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது தலைவர் மட்டும் ஆதரவளித்த நிலையில் (more…)
கடந்த இரண்டு நாள் களில் நான்குபேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றுப் புதன்கிழமையும் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமையும் உடுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts