யாழ் தேவி செப்டெம்பர் மாதம் யாழிலிருந்து கொழும்பிற்கு புறப்படும் இந்தியத் துணைத்துாதுவர்

கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்.தேவி புகையிரதச் சேவையானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இந்தியத் துணைத்துாதுவர் கூறியுள்ளார். காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.எனவே இவ்வருடம் யாழ்தேவியில் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்ல முடியும் என்றார்.

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் அலுவலர்களையும் கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வில் இன்று புதன்கிழமை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)
Ad Widget

இருநாட்டு மீனவ சமாசங்களும் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும்; இந்திய துணைத்தூதுவர்

இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்' என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவை; யாழ். செயலக அறிக்கை கூறுகிறது

யாழ்.மாவட்டத்தில் 144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 மிதிவெடிகள், 534 தாங்கி எதிர்ப்பு வெடிகள் மீட்பு

யாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 தனிநபர் மிதிவெடிகளும், 534 தாங்கி எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டதாக வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழில் தந்தை, தாயை இழந்த நிலையில் 5,732 சிறுவர்கள் உள்ளனர்

யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். (more…)

யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றது: சமவுரிமை இயக்கம்

யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றதாக சமவுரிமை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தீக்காயங்களுக்கு இலக்கான இளைஞர் மரணம்

தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

கைதடி முதியோர் இல்லப் பணியாளருக்கு நிரந்தர நியமனம் இதுவரை இல்லை

கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரிந்து வருவோர் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அரச முதியோர் இல்லத்தில் தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரியும் இவர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் அரச...

சிறிதரன் எம்.பி, உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை கண்டிக்க வேண்டும்: மனோ கணேசன்

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையாகும். (more…)

எதிர்பார்த்த விளைச்சல் இல்லை யாழ். நெற்செய்கையாளர் கவலை

யாழ்.குடாநாட்டில் விவசாயிகளால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கை எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தாம் நட்டமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

பல்கலை. மாணவர்களை விடுதலை செய்ய கோரி யாழ். நகரில் கையெழுத்து போராட்டம் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது தாக்குதல்;கழிவு ஒயிலும் வீச்சு

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)

கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி

வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என (more…)

பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்

பட்டாசு வெடித்தில் சிதறியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழில் நான்கு நாட்களுக்கு 9 மணித்தியாலயம் மின் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் (more…)

கிளிநொச்சி சம்பவம்! அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்!- சிறிதரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

வட மாகாண ஆளுநரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக திரு.எதிர்வீரசிங்கம் !

வட மாகாண சபைக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

தேசிய மீனவர் மாநாடு

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தேசிய மகாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார். (more…)

ரிக்கெட் வழங்காத பஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எப்போது? விசனம் தெரிவிக்கின்றனர் மக்கள்

தனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்க வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெரும்பான்மையான தனியார் பஸ்கள் பின்பற்றுவதில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts