விபத்தில் இளைஞர் பலி

மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக நாய் ஒன்று ஓடி விபத்துக்கு உள்ளானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறுவிளான் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ரவிராஜ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். (more…)

யாழில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின்விளக்கு பொருத்துவது கட்டாயமாக்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளுக்கு மின் விளக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார். (more…)
Ad Widget

யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

யாழ்ப்பாணத்தின் சில பிர தேசங்களில் ஒன்பது மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வீதி அகலிப்பு பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும், (more…)

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் உணவகங்களை மூட நடவடிக்கை

சுகாதார சீர்கேடான முறையில் இயங்கும் உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார். (more…)

வன்னி போர் சூழலில் அகப்பட்ட பட்டதாரிகள் பயிலுனர் நியமனம் கோரி மகஜர் கையளிப்பு

வன்னி போர் சூழலில் அகப்பட்ட யாழ். மாவட்ட பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் தம்மையும் உள்வாங்குமாறு கோரி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். (more…)

முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள்

வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்ற விபரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக (more…)

96ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தின் பொன் அணிகள் இரண்டும் 96ஆவது தடவையாக துடுப்பாட்டக் களத்தில் மோதுகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கிரிக்கெட் போட்டிகளில், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது . முதலில் துடுப்பெடுத்தாடும் யாழ்ப்பாணக் கல்லூரி...

எந்த உதவியும் வேண்டாம் சொந்த இடத்துக்கு விடுங்கள் ;- வலி.வடக்கு மக்கள்

எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம், சொந்த மண்ணில் குடியமர்த்தினாலே போதும், நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்வோம். எனவே சொந்த இடம் திரும்ப விடுங்கள். (more…)

28இல் 28ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். (more…)

சா/த பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சை – கல்வியமைச்சர்

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட மாநாடு

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலான மாநாடு ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

2011 உயர்தரத்தில் தோற்றிய மாணவர்கள் 4 தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி

2011ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியருக்கு நான்கு தடவைகள் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் குடும்பஸ்தரை காணவில்லை

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழ். விஜயம்

இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர்- 7 இல் நடத்த அரசாங்கம் முடிவு?

சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் 7 ம் திகதி நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் (more…)

பனம் கைத்தொழில் போதனாசிரியர்கள் தாய்வானுக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பனம் கைத்தொழில் போதனாசிரியர்களில் தெரிவு செய்யப்படும் போதனாசிரியர்களை பனை அபிவிருத்திச் சபை தாய்வான் நாட்டுக்கு பயிற்சி பெறுவதற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது (more…)

மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு: த.தே.கூ. இந்தியாவிற்கு கடிதம் ?

வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க (more…)

முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைக்கிறார் அரச அதிபர்; சோ.சுகிர்தன்

மீளக்குடியமர வேண்டியோரின் விவரங்கள் தன்னிடம் இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறுவது, "முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பானது. (more…)

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த விசேட ஆய்வு நடவடிக்கை

டெங்கு மற்றும் மலேரியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் தலைமையகத்தினால் விசேட ஆய்வு நடவடிக்கை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts