- Thursday
- January 23rd, 2025
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. [caption id="attachment_59218" align="aligncenter" width="758"] healthcare, people, charity and medicine concept - close up of woman in t-shirt with breast cancer awareness ribbon over pink...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து...
நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ வைக்க முயன்றபோது பொலிஸார் அங்கு வந்ததால் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையில் இருந்தவர்கள் மீதும், பொருட்கள் மீதும் பெற்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்....
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07ல் இருந்து 06 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள கம்பஹா...
வட மகாண ஆளுநராக முன்னாள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான என்.வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாகாண ஆளுநராக முன்னாள் நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த...
யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது - 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன்...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய நாடாளுமன்ற நவம்பர் 21ஆம் தேதி நடத்த...
பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடாத்துவதற்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 04 முதல்...
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28 வது பிரதமர் ஆவார். இதேவேளை, நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 01. பாதுகாப்பு 02....
வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த...
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில்...
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி...
புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட...
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280...
புனரமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (19) கையளித்தார். நெடுந்தாரகை படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற...
Loading posts...
All posts loaded
No more posts