- Monday
- February 24th, 2025

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34 ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி மாலை நடைபெற்றது. கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் 'இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் -...

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள்...

கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 51) அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 50) ஆகியோர் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட...

அதீத போதை காரணமாக உரும்பிராயில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார். கடந்த 29ஆம் திகதி அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம் வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும். ஒக்டேன் 95 பெற்றோல் விலை...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி...

வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்படுகின்றனர். வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) காலை சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். 50 மற்றும் 51 வயதான...

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும்...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கு மேலதிகமாக, நவம்பர் 4 ஆம் திகதியும்...

அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியற் பயணத்தை தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு...

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போதியளவு கடவுசீட்டு கையிருப்பில் உள்ளதால் நீண்ட கால தேவைகளுக்காக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் காத்திருக்க வேண்டும்....

மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே. கே. சரத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி...

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நீர்வேலி பகுதியில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள்...

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த...

தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் இம்முறை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத்...

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. [caption id="attachment_59218" align="aligncenter" width="758"] healthcare, people, charity and medicine concept - close up of woman in t-shirt with breast cancer awareness ribbon over pink...

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்று முன்தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த வேளை, ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

All posts loaded
No more posts