- Thursday
- January 23rd, 2025
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில்...
ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச...
தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை...
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி ஆயுததாரிகளால் நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். போர்க்காலத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளராக செயல்பட்டு வந்திருந்த...
சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல்...
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னிமாவட்டத்திற்கான தேர்தல்வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கோரி மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சி தனது சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுநிராகரிக்கப்பட்டதால் இந்த மனுவைதாக்கல் செய்துள்ளது. கட்சியை சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசா என்பவரும் வேறு இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.தங்கள் மனு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள அவர்கள் தாங்கள்...
இன்றையதினமும் (18) நாட்டின் வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...
வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வட, கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 - 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ்...
வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்ச்சி மேற்கொண்டு வந்துள்ளார். சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் . இந்நிலையில் நேற்றைய தினம் எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு...
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பெய்துவரும் பலத்த மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டல திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்யைில், வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லி மீற்றர் இயலும் கூடிய ஓரளவு...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்று சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர்...
திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி "பால் தொழிற்சாலை" கடந்த ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. பொது...
யாழ்ப்பாணத்தில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ,...
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (14) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்....
தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர்...
மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts