- Monday
- February 24th, 2025

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில் , கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து...

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை நாளை (11)அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம்...

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை...

சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று (05) காலை உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர மீனவர்கள் இன்று (05) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (04) காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம்...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன்...

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று அது...

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது. நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதுடன் திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக...

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன அதன்படி நாளை...

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும்...

பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக...

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதானல் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...

யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்., கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்...

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர்...

All posts loaded
No more posts