- Friday
- February 21st, 2025

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்றைநய தினம் (20) வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தையிட்டி விகாரையில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம்...

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா நேற்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு...

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது. இதன்போது...

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர் மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்களை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று(20) நண்பகல் 12 மணிக்கு...

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகர சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின்...

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம்...

முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி...

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை...

மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளமை...

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம் என்றும், வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை...

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,750 ஆல் அதிகரிக்கப்படும். இது 2027 வரை மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு அரச ஊழியரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.5,975 ஆக உயர்த்தப்படும். மேலும், இதுவரை அரச ஊழியரின் சம்பளத்தில் சேர்க்கப்பட்ட...

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று முதல் (18) கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு...

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட...

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார்...

All posts loaded
No more posts