- Thursday
- January 16th, 2025
மன்னாரில் பனை அபிவிருத்திச் சபையின் கீழான பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் முதல் வரியிலிருந்த தமிழ்மொழி அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பில் இரண்டாவது வரிக்கு மாற்றப்பட்டு சிங்களமொழி முதல் வரியில் இடம்பிடித்துள்ளது. வடக்கு – கிழக்கு கடந்த ஒருவாரம் பயணம் மேற்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில்...
தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய்...
வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் பொலிஸாரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர்...
வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கத்தினை ஸ்தாபகராக கொண்டு ஆரம்பிக்கப்படும் இலவச ஆடை வங்கி, எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பாகவும், நல்லூர் பிரதே சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி...
புது வருடத்துக்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிய நபர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்று காலை சுண்டுக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டு புதுவருட தினமான நேற்று ஒருவருக்கு ஒருவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியில் கொண்டாடினர். வழமைபோல குறித்த நபர் சுண்டுக்குளி பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். இவர்...
பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத...
அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 33 நாள்களே நிரம்பிய பசுக்கன்றுக்குட்டி துள்ளித்திருந்து வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது. அதனைக்...
பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரெளு அம்மன் கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானப்படை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலனறுவை செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் இன்று...
அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...
கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிசை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை...
தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும்...
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில்...
கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது....
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு...
நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து உறுப்பினர்கள் வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய...
யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியிருந்தது....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...
முதியவர் உயிரிழப்பை அடுத்து மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அச்சுவேலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத்...
யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர சபைநில் சர்ச்சை ஏற்பட்ட சமயம் அடிக்கல் நாட்டுவிழாவுடன் பணி நிறுத்தப்பட்டால்...
Loading posts...
All posts loaded
No more posts