வியாபார நிலையமாக மாறிய நினைவுத்தூபி

சித்திரைப் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்.குடா எங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது.தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் யாழ் குடா எங்கும் வீதிகளில் கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. (more…)

சிறுவர் இல்லங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது: யாழ் அரச அதிபர்

யாழ்.குடாநாட்டில் பெண்கள், சிறுவர்களுடன் இயங்கும் இல்லங்கள், நிறுவனங்கள் எவற்றிலும் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.கைதடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...
Ad Widget

ஒரு றாத்தல் பாணையும் விட்டு வைக்காத திருடர்கள்

சைக்கிளில் கொழுவியிருந்த ஒரு றாத்தல் பாண், கடைக்குச் சென்று திரும்பிய பின் காணமல் போன சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சிவன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

நயீனாதீவில் தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு கோயிலுக்குள்ளே ஓடிய நபர்!

நயீனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் தனது நாக்கினை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்தம் வடிய வடிய கோயிலுக்குள்ளே ஓடித்திரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (more…)

4 மாதங்களை அதிகரித்தது ஆட்பதிவுத் திணைக்களம்

12 மாதங்களை கொண்டதே ஒரு வருடமாகும் எனினும் 16 ஆவது மாதம் என குறிப்பிட்டு இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டுள்ளது. (more…)

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இறந்து போன ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கிய, கல்வி திணைக்கள அதிகாரிகள்

இறந்து போன ஆசிரியை ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் நோயாளர்களிடம் பணம் அறவீடு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பணம் கோரப்படுவதாக (more…)

ஸ்கான் இயந்திரத்துக்குள் மரணித்த மகளின் விசாரணையை மூடி மறைக்க இடமளிக்க வேண்டாம்: தாய்

நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார். (more…)

கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

”கங்ணம் ஸ்ரைல்” நடனம் வெளிவந்து உலகெங்கும் பிரபல்யமாகியிருக்கும் இத்தருணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உலகத்தலைவர்களை கிண்டல்செய்யும் வகையில் You tube இல் கணினி பல்லூடக வடிவமைப்பாளர்களால் காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன . உங்களுக்காக சில வற்றினை இங்கே நகைச்சுவைக்காக தருகின்றோம் அமெரிக்க ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம் இலங்கை ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம்...

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த...

வெளிச்சம் இன்றி பயணித்த நான்கு துவிச்சக்கர வண்டியை பறிமுதல் செய்த கோப்பாய் பொலிஸார்!

துவிச்சக்கர வண்டிக்கு “லைட்” போடாத காரணத்தால் நான்கு பேரின் துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் நேற்று இரவு 7.30 மணிக்கு இருபாலையில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (more…)

இடது காலுக்கும் வலது காலுக்கும் வித்தியாசம் தெரியாத வைத்தியர்!

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே...

விரைவில் வரலாம் “குப்பைக்கும் வரி”

திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பெரும் நெருக்கடியாகியுள்ளநிலையில் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து குப்பைக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். (more…)

எதிர்வரும் காலங்களில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி

பக்க கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவு!

சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். (more…)

வீட்டுக்கு தீ வைத்த வி­ஷமிகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் வளவினுள் புகுந்த விஷமிகள் வீட்டினைத் தீயிட்டு எரித்துள்ளனர். வீட்டுக்காரர் வெளியே சென்ற நேரம் பார்த்து விஷமிகள் தீ வைத்ததில் வீடு முற்றாக எரிந்ததுடன், உடைமைகளும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரணி கரம்பைக்குறிஞ்சி கிழக்கில் இடம்பெற்றது. (more…)

சுகாதார அமைச்சினால் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் மருந்துகள் தனியார் வைத்தியசாலைக்கு கடத்தல்?

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் முக்கியமான சில மருந்துகள் சில தனியார் வைத்தியசாலைகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது.குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் நோயாளர்களுக்கு என அமைச்சினால் வழங்கப்படும் (more…)

இலங்கை மின்சார சபை மற்றும் பருத்தித்துறை பிரதேச அலுவலகம் மக்களை உதாசீனப்படுத்தி வருகின்றனவா?

வடமராட்சிப் பிரதேச மின்பாவனையாளர்களை இலங்கை மின்சார சபை பருத்தித்துறை பிரதேச அலுவலகம் என்பன தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது இருப்பது வேதனை தருகின்றது என்று வடமராட்சிப் பிரதேச மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts