- Saturday
- April 19th, 2025

ரயில் வந்த போதும் புகையிரதக் கடவை மூடப்பட்டாது இருந்த சம்பவம் யாழ். மீசாலை ஜயா கடையடி புகையிரதக் கடவையில் செவ்வாய்க்கிழமை (06) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு வீதியிலிருந்து ஏ – 9 வீதிக்கு நுழையும் மேற்படி புகையிரதக் கடவை ரயில் வந்த போதும், மூடப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருக்கையில் சற்று தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்ததையடுத்து...

யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த ஒருவர், அவ்வீதியால் சென்றவரை மறித்து தொண்டையில் கடித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகலின் போது இடம்பெற்றுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கார்த்திகேசு மகாதேவன் (வயது 55) என்பவரே தொண்டையில் கடி வாங்கியுள்ளார். வீதியால் சென்ற இவரை மறித்த ஒருவர், இவரது தொண்டையில் கடித்துள்ளார். கடியுண்டவரை காப்பாற்றச்...

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது. இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முக்கிய இரு...

உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண்...

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே - 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை...

சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட 23 வயது யுவதியும், 45 வயது ஆண் ஒருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் யுவதி சிகிச்சை பயனின்றி சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது) திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது... விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ திசைகாட்டும் நிறுவனமே தனக்கு விசா வாங்கி கொடுத்ததாகவும்...

காதலியை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளை கோவிலடியில் விட்டுச் சென்றதாக கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்ற சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியாகும். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விசேட பூசைகள் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். (more…)

நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)

யாழ். மானிப்பாய் சந்தைக்கு முன்பாக செல்லும் முத்துத்தம்பி வீதியில் திருட்டு நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவது தொடர்பில் எச்சரிக்கை செய்யப்பட்ட சுலோக அட்டையொன்று திங்கட்கிழமை (17) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

கலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது நடந்துவரும் "கிஸ் ஆஃப் லவ்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்றை சென்னையில் உள்ள மத்திய அரசின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான (more…)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - விசனமும் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் பீடியொன்று காணப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. (more…)

விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை "SEAT BELT" அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts