- Wednesday
- January 15th, 2025
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் எனச் சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி...
டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து, குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ்...
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட...
தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்....
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் தரம் 7இல் பயிலும் மாணவர் ஒருவர்...
பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று 9 ஆம் திகதி காலை சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட லிட்ரோ கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அந்த லேபிளை அகற்றியபோது, சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது. இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக...
காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் தாக்கியுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து...
குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல்...
வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை கிளிநொச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்....
வடமராட்சி பகுதியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று, ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி- வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வல்லை பகுதியில் வெள்ளை நிற காரில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள்,...
வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த...
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் நேற்று (26) பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக...
வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம்...
தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை...
கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய இறுதி...
தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் பேசும் பல்வேறு தரப்பினரிடையேயும் குறித்த ஊடகவியலாளரின்...
பிள்ளையார் ஆலய குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம், பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக...
பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம்...
Loading posts...
All posts loaded
No more posts