- Sunday
- November 24th, 2024
வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை இரு புதல்வர்கள் மற்றும் 4 சகோதரிகள் குருக்கள் புதுக்குளத்தில் உள்ள தமது வீட்டிற்கு செல்வதற்காக குருமண்காட்டில்...
யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் உள்ள பழையமாணவர் சங்கங்களாலும் கல்லூரி சமூகத்தினாலும் இதனை முன்னிட்டு செயற்பாடுகள் சிறு சிறு விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மகுடமாக நிறைவு விழா ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது இங்கு தான்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் செயற்பாடுகள் நோயாளர்களை மேலும் நோய்களுக்கு உள்ளாக்குகின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அசட்டையாகவே செயற்படுவதாகவும் மக்கள் சாடியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் உணவுக்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் இருக்கும் இந்த சிற்றுண்டிச்சாலையையே நம்பியுள்ளனர். ஆனால் இந்த உணவு...
அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து...
முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....
வவுனியாவில் நேற்றயதினம் (24.8.22015) பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டைப் பகுதியில் கடையில் குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு விநியோகம் செய்யவிருந்த நிலையில் கன்ரர் வாகனத்துடன் தண்ணீர் போத்தல் சகிதம் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. பொது சுகாதார பரிசோதகர்கள்...
நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வருகை தந்து ஆலயப் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.8.2015) அதே இடத்தில் கொண்டு...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டியுள்ள கட்சியாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எவ்வித ஆசனங்களையும்...
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையங்களிலுள்ள சரஸ்வதியின் கைகளிலுள்ள வீணையை தேர்தல் கண்காணிப்பாளர்கள் துணியினால் மூடிமறைத்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்கள்...
தேர்தல் பிரசார மேடையில் குடும்ப விடயம் கதைக்கப்பட்டமையால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவம், வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டம் யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, பிரசாரத்தில் ஈடுபட்டவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் 21 வயதுடைய...
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக...
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஏசிய சம்பவமொன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். நகருக்கு அண்மையிலுள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது. இதன்போது, 'வடமாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டு வரும் அறிக்கையானது,...
வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் முகத்தை எலிகள் கடித்ததால் அச்சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குப் பிறந்த சிசுவொன்று, பிறந்த மறுநாளே உயிரிழந்துள்ளது. இந்த சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போதே,...
சுனாமியின் போது 9 வயதில் காணாமல்போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு...
நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள்...
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...
சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ்...
வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது கட்சி அலுவலகங்களை நோக்கிச் செல்கின்றனர். வேலைவாய்ப்பு தேவையை நாடி வரும் இவர்களை அந்தக்...
யாழ். மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டு வந்த மருத்துவ முகாம்கள் நிர்வாக குளறுபடிகள் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்படகின்றன என யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: யாழ். மருத்துவ சங்கம் வடக்கு...
Loading posts...
All posts loaded
No more posts