- Sunday
- November 24th, 2024
யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது: பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்....
யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால் பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் பழையமாணவர்களால் கிழித்தெறியப்பட்டு கல்லுாரி வீதி ஓரம் குப்பையில் வீசப்பட்டுள்ளது.முன்னதாக...
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 18 வயது முஸ்லீம் மாணவி ஒருவர் எல்லையைக் கடக்க முற்பட்டுள்ளார். அவரை முதலில் துப்பாக்கியால் குறிவைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறித்த மாணவியை சுட எத்தணித்துள்ளார்கள். அருகில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் சுடவேண்டாம் என்று சைகை காட்டுகிறார். மாணவியின் பாடசாலைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டவேளை...
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....
கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி நீதிமன்றில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அறை...
நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு...
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...
பூகம்பம் ஏற்பட்ட நாடு என்னவென்று கூடத் தெரியாமல் நீர் எல்லாம் வரலாற்று ஆசிரியராக இருக்கின்றீர்களா? என்று அதிபர் ஒருவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை ஒருவரை திட்டிய சம்பவம், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பாடசாலையொன்றில் வியாழக்கிழமை (17) நடைபெற்றுள்ளது. சிலி நாட்டில் 8.30 ரிச்சர்ட் அளவில் புதன்கிழமை (16) பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வரலாற்று...
போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப்...
நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் சோட நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக குறித்த நிறுவனத்தின்...
கடந்த வாரம் தொடக்கம் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர் அணிகளிடையே நடைபெற்று வந்த கருத்து மோதல்கள் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் கொட்டன்கள் பைப்புகளுடன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகமெங்கும் ஆர்ப்பரித்து திரியும் அளவுக்கு முற்றியது .காலையில் 4ம் வருட மாணவர்களால் 3ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்று (10.9.2015) காலை...
வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது....
மயக்கமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று காரைநகர் வைத்திசாலையில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வேளையில் பந்தைப் பிடிக்க ஒடிச்சென்ற வேளையில் இருவர் மோதிக்கொண்டதில்...
கணணி வீடியோ கேம் ஐ தொடர்ந்து 22 நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ருஸ்டம் (Rustam) திடீரென உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 17 வயதுடைய ருஸ்டம் (Rustam) - கம்ப்யூட்டர் கேமில் மிகவும் ஆர்வம் மிக்கவன், வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு விருப்பமான 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' (Defence of...
கரணவாய் தெற்கு கரவெட்டி பகுதியினைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை 2013ஆம் ஆண்டிலிருந்து காணவில்லை என காங்கேசன்துறை மோசடிப்பிரிவு அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு கரணவாய் தெற்கு கரவெட்டி பொன்னன் வளவு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் ஒருவர் கடை ஒன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்வதற்கென 3 இலட்சம் ரூபாய் பணத்தினை...
முச்சக்கர வண்டி ஒன்றினை தனது வியாபார நிலையமாக்கி அதன் மூலம் தனது அன்றாட வருமானத்தினை தேடிக் கொள்ளும் யாழ்.வாசியின் முயற்சியை பலரும் வியப்புடன் பார்த்து அவரை பாராட்டியும் உள்ளனர். தனது மரக்கறிச் சந்தை வியாபாரத்தை விஸ்தரிப்பதற்காக முச்சக்கர வண்டி மூலம் தனது வியாபார பயணத்தை மேற்கொள்வது வியக்கத்தக்க விடயமாகும் என மக்கள் பலரும் அவரை பாராட்டியிருக்கின்றனர்.
இன்று (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்...
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....
புலனாய்வாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கும் நவடிக்கையில் ஈடுபடுவோரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொக்குவிலில் செவ்வாய்க்கிழமை சில வீடுகளுக்கு சென்ற கொச்சைத் தமிழ் பேசும் மூவர் தாம் சி.ஐ.டியினர் என்றும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரைத் தாம் கைது செய்துள்ளனர் என்றும், அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர். சிலர் அவர்கள் சி.ஐ.டியினர்தான்...
நெல்லியடி நச்தைப் பதகுதியில் இயங்கும் பழக்கடைகளில் மருந்து விசிறப்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லியடிப் பொதுச்சந்தையில் 10 மேற்ப்பட்டடோர் பழ வியாபாரம் செய்து வருகின்றர். தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் தமது விற்பனையை அதிகரிக்கு நோக்கில் மருந்து விசிறி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். மருந்து விசிறப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts