- Sunday
- November 24th, 2024
வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் ஒன்று அடுத்தமாதம் பூமியின் மீது மோதப் போவதாகவும், அப்போது உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு...
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...
குவாண்டமாலா என்னும் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், அங்கேல் என்னும் 12 வயதுச் சிறுவன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். அவனது தந்தையார் பஸ் ஓட்டுனர். சிறுவன் பாடசாலைக்கு நடந்து சென்று பின்னர் வீடு திரும்புவது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் அவன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை, காட்டுப் பாலம் ஒன்றில் வைத்து ஒரு காடையர்...
நயினாதீவு, விநாயகர் வீதியின் புனரமைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை, அந்த வீதியை புனரமைப்பதற்காக ஒப்பந்த செய்திருந்த நபர், வீடு கட்டும் ஒருவருக்கு, விற்பனை செய்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குறித்த ஒப்பந்தகார், கிராமஅலுவலர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் தலைவர் விசாரணைக்காக தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி...
மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலன் லோரன்ஸ் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...
வடக்கு மேற்கு மெக்சிகோ திஜுவானாவை சேர்ந்த பெண் ரோசா இவர் தனது பேஸ் புக் பக்கத்தில் கைகள் கட்டபட்ட நிலையிலும், மற்றும் குழந்தையின் வாயை டேப் கொண்டு ஒட்டபட்ட நிலையிலும் படுத்து இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பேஸ்புக் ஆர்வலர்களின் ஏக கண்டனத்துக்கு அந்த பெண் ஆளானார். இதை தொடர்ந்து...
ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது, அரசியல் இலாபத்துக்காகவும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என யாழ்ப்பாண சாலை காப்பாளர் ஜெ.அன்ரன்மயூரன் தெரிவித்தார். யாழ்.சாலை முகாமையாளர் அநீதியாக செயற்படுவதாக கூறி, கட்சிகள் சார்ந்த ஊழியர் சங்கங்கள் இணைந்து முகாமையாளருக்கு எதிராக போராட்டம் ஒன்றை புதன்கிழமை (14) நடத்தின. இந்தப்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...
18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும்...
தனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின் அருகாமையில் உள்ள நீர்நிலை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. இதையறியாத தாய் பின்னர் திடீரென தனது குழந்தையை காணவில்லை என அப்பகுதி முழுவதும்...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...
சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது. அதைப் பெருமளவு மக்கள் பார்வையிடுவதோடு, பாலைப் போத்தல்களில் எடுத்தும் செல்கின்றனர். கடந்த வருடம் இந்தப் பகுதியில் உள்ள வேறொருவரின் வீட்டிலும் இவ்வாறு வேப்ப மரத்திலிருந்து 15 தினங்களுக்கு மேலாக பால்வடிந்ததது. மருத்துவ நிவாரணியான வேப்பம் பாலை மக்கள் ஆர்வத்துடன்...
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அந்தப் பெண் நேரடியாக...
பாணந்துறை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்விகண்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர தான் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவன் எனவும் , அதற்கான கட்டணம் செலுத்தவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு வந்த 35 வயதான சந்தேகநபர் கருமபீடத்துக்கு சென்று அங்கிருந்த காசாளரிடம் வங்கி...
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
Loading posts...
All posts loaded
No more posts