- Sunday
- November 24th, 2024
வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்தது குடும்பத்தவர்களை அலற வைத்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்து குடும்பத்தவர்களை அலறவைத்துள்ளது. குடும்பத்தவர்கள் அதனை விரட்டிய நிலையில், அருகிலிருந்த கேணிக்குள் பாய்ந்துள்ளது முதலை.
எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில்...
யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...
தேனீர் வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில் வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த...
பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்....
பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...
இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு...
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப்பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் காலையில்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் வெளியில் தனியார் இரத்த பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்மராட்சிப் பகுதியில் தற்போது அதிகமாக டெங்கு நோயின் தாக்கம் இருப்பதால், காய்ச்சலால் பீடிக்கப்படும் நோயாளிகளை எஃப்.பி.சி (முழு இரத்த கணிப்பீடு) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியவர்கள் பணிக்கின்றனர்....
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன.நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் ஆன்டி-செல்பி டேப்ஸ் என்ற...
இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வலது கையின் இரண்டு விரல்கள் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்) வெட்டி அகற்றப்பட்டு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு தங்ககொட்டுவ, கோணவில மனந்துறை மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான 65...
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக்...
தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தப்பிச்...
காங்கேசன்துறை இராணுவ காவலரணுக்கு முன் நிறுத்தி விட்டு, பணிக்காக உள்ளே சென்ற தமிழ் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், திருட்டு போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தனர். காங்கேசன்துறை ஹரிசன் படைமுகாமில் கடமையாற்றும் பண்டத்தரிப்பு பகுதியினைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், வியாழக்கிழமை (29) காலை வழமை போல இராணுவ காவலரனின்...
யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக...
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...
பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.நகரின் சத்திரச்சந்தியில் இருந்து அகற்றப்பட்ட புராதன வள்ளுவர் சிலைக்கு என்ன நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு 8மணியளவில் வீதி அகலிப்பு மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் அமைப்பதற்காகவும் குறித்த வள்ளுவர் சிலை மக்களின் கண்ணுக்குப் படாமல் இரவோடு இராவாக...
போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்: இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி...
Loading posts...
All posts loaded
No more posts