Ad Widget

பேஸ்புக் மூலம் யுவதியை ஏமாற்றி நகைகளை அபகரித்த பொறியியலாளர் கைது!

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...

தொடர்ச்சியாக நீரை வெளியேற்றிக்கொண்டிருக்கும் கிணறு!

தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது. இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும்...
Ad Widget

பஸ்கள் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம். தனியார் பஸ்ஸை முந்திச் செல்லாவிட்டால் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தண்டப்பணத்தை யாழ்.சாலை முகாமையாளர் அறவிடுகின்றார் என ஸ்ரீங்கா சுதந்திர போக்குவரத்துச் ஊழியர் சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம்...

எனக்கு திருமணமாகவில்லை. நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்..நீதிபதியிடம் கெஞ்சிய கைதி!!!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....

தும்புத்தடியால் அடித்த அதிபருக்குப் பிணை

விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையைத் தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறை மஹாநாம வித்தியாலயத்தின் அதிபர் யமுனா நயனா காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு, நீதவான் சந்திம...

சுயநினைவிழந்த நிலையில் இராவணன்!! தேடிச் சென்ற பெண்!

எல்ல வெல்­ல­வாய கரந்­த­கொல்ல பிர­தே­சத்­தி­லுள்ள இரா­வண எல்ல கற்­குகை ஒன்­றினுள் சுய­நி­னை­வி­ழந்து காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் இரா­வ­ணனை நினைவு திரும்பச் செய்­வ­தாகத் தெரி­வித்து மொறட்­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள மந்­தி­ர­வாதி பெண்­ணொ­ருவர் உட்­பட 18 பேர் நேற்­று­முன்­தினம் அக்­கு­கை­யினுள் சென்­றி­ருந்த போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர். சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சம்­பவ தினத்­தன்று இக்­கு­கை­யினுள் வழ­மைக்கு மாறாக ஏதா­வது ஒரு...

ஊடகவியலாளர்கள் நினைவாக யாழில் நினைவுத் தூபி!சிங்களத்தில் மட்டும் வாசகம்!

இலங்கையில் ஊடகப்  பணியின்போது மரணித்த 44  ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக யாழ். பிரதான வீதியில் –  யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக  நினைவுத்  தூபியொன்று   நேற்று (27)  திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு – தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உறவினைக் கட்டி எழுப்பும் முகமாக மூன்று நாள் பயணமாக குடாநாடு வருகைதந்த அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். அந்த...

கூகுள் நிறுவனத்தினால் வந்த சோதனை!

சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் சுவிஸில் வசித்து வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அவரின் வீட்டிற்கு முன்னால் வேப்பமரம் ஒன்று நின்றுள்ளது. அவர் மீண்டும் சுவிஸிற்குச் செல்லும்போது வீட்டில் தனது உறவினர் முறையான ஒரு குடும்பத்தினை வாடகைக்கு குடியமர்த்திவிட்டுச் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு...

‘அம்மா அன்பின் சக்தி’: உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்!!

தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது....

பொலிசாரையும் விட்டுவைக்காத Google Street View

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள வீதி பார்வை (Street View) இனைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பொலிசாரை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமொன்று நடைபெற்றுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Street View வசதியைப் பயன்படுத்தி பன்னல பிரதேச பொதுமக்கள் தங்கள் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரிடம்...

பாலியல் குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...

வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய மக்கள்!!

நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும்...

காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில்…!

சாவ­கச்­சேரி நகர் பகு­தியில் அழ­கு­சா­தனப் பொருள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரியும் இளை­ஞ­ரொ­ருவர் இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி கற்கும் 2 மாண­வி­களை காத­லித்­ததன் விளை­வாக அவர்கள் இரு­வரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்து ஆபத்­தான நிலையில் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் குறித்த சம்­ப­வத்தை அறிந்த குறித்த இளைஞன் உட­ன­டி­யா­கவே சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில்...

பெண்ணைக் கடத்திய இரு இளைஞர்கள்! மக்களால் மடக்கிப் பிடிப்பு!

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து...

பயணியின் முன்மாதிரியான செயற்பாடு : போட்டி போட்டு ஓடிய சாரதிகளின் அனுமதிப்பத்திரம் பறிப்பு!!

இன்று காலை கல்முனை நோக்கி புறப்பட்ட அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நிறைவான பயணிகள் இருந்தும் A9 சாலையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடி கொண்டிருந்ததால் , பயணி ஒருவர் கொடிகாம்ம் பொலிஸ்க்கு தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து கொடிகாம சந்தியில் வைத்து பொஸிஸ் இனால் இரு சாரதிகளுக்கும் எச்சரிக்கப்பட்டு ,...

புத்தர் நாகமாக மாறினார்

புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்...

யாழில் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி வரும் ஆசாமி!

யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார் வங்கி கூறியுள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்று...

கப்பம் கேட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரபல தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் சிலர், 11ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் இருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 11 மாணவர்களிடம் உயர்தர மாணவர்கள் கப்பமாக பணம் தருமாறு கோரியதாகவும், அதனை அவர்கள் கொடுக்க மறுத்தமையால், தரம் 11 மாணவர்களின்...

மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டிய அரச பேரூந்து சாரதி

இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது. வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி தனது பயணத்தை...

மகா சிவராத்திரிக்காக படையினர் கோயில்கள் துப்பரவுசெய்து தாகசாந்தி நிலையங்கள் அமைத்தனர்!

புதிதாக பதவிஏற்றுள்ள  யாழ் கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் மகா சிவராத்திரிக்காக கோயில் துப்பரவு  செயற்பாடுகளும் தாகசாந்தி நிலையங்கள்  அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக, தமது படை வீரர்களைக் கொண்டு குடாநாட்டில் உள்ள முக்கிய ஆலயங்கள், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை புனிதமாக்கும் பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts