Ad Widget

மாமியின் ATM அட்டையை களவாடிய மருமகளுக்கு விளக்கமறியல்

கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார். பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி...

பெண்ணொருவர் ஓட்டோ சாரதி ஒருவரை அடிக்கும் காணொளி!!

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது. சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி. இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர். ஏற்கனவே சில...
Ad Widget

குசு வுக்குள்ளது மருத்துவ குணம்- ஆராய்ச்சி முடிவு

அடிக்கடி வாயுக் “குண்டு“ போடுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள்! அது மனித குலத்தின் நலவாழ்வுக்கு நல்லது என்று புதிய ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஆசன வாயு வெளியேற்றுதலானது, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாத நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாம்! வாயுவை விடுவிப்பவர்களுக்குச் சரி, பக்கத்திலே இருப்பவர்கள் தவிப்பரரே என்று நீங்கள் கேட்கலாம். ’மனிதரால் வெளியேற்றப்படும்...

தந்தை கொலைசெய்யப்பட்டதை அறியாது தந்தையை எழுப்ப 5 நாட்கள் முயற்சி செய்த பிள்ளைகள்!!

கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.தமது தந்தை இறந்ததை அறியாத...

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக...

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை?

சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும்...

சுபநேரத்தில் கொலை: பூசாரி கைதானார்

ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...

இரு கோவில்களின் விக்கிரகங்கள் மணலினுள் புதைப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு...

தாமதமாக பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களை தண்டித்த அதிபர்

கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி யாழில் மோசடி!

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது, நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம்....

டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத்...

செம்மணிப் பகுதியில் ஆசிரியையை மீது பாலியல் தொந்தரவு!!

நேற்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில்...

மனைவியின் காது, மூக்கைக் கடித்துக் குதறிய கணவன்

மனைவியின் காது, மூக்கு என்வற்றைக் கடித்துக் குதறியுள்ளார் கணவன். தென்மராட்சிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. சவுதியில் இருந்து வந்த கணவன் தனது மனைவியுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். சவுதியில் மனைவியைக் கணவர் அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாம். அங்கு கணவர்கள் மனைவியை அடிப்பதில்லையாம். மனைவியைத் தள்ளி கீழே விழுத்திவிட்டு அவர்களைக் கடித்தே காயம் ஏற்படுத்துவது வழக்கமாம். அவ்வாறே தனது கணவன் தன்னைத்...

சம்பந்தரின் குத்துக்கரணம்! ஊடகவியலாளர்கள் மூவர் ராஜினாமா?

அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார்....

சம்பந்தனை அனுமதித்த இராணுவச் சிப்பாயின் கன்னத்தில் அறைந்த கேணல்!

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...

வவுனியாவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட தாய்!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை...

மகளுக்காக இந்திய மாணவரின் வலைத்தள முகவரியை விலை கொடுத்து வாங்கிய பேஸ்புக் நிறுவனர்!

இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், அமல் அகஸ்டின், இவர் வலைத்தள முகவரிகளை தனது பெயரில் பதிவு செய்து கொள்ளும் பொழுதுபோக்கு உடையவர். maxchanzuckerberg.org என்ற வலைத்தள முகவரியை தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார் அகஸ்டின். இந்நிலையில், வலைத்தள...

வல்லிபுர ஆழ்வாரிற்கு வந்த நிலை!!

கடவுள்களை வைத்து பிழைப்பு நடாத்தும் செயல் நாளுக்கு நாள் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கையில் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கோடிக்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது யாழ் அரச அதிபரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியமையால் அங்கு கூட்டங்கள் நடத்த அரசாங்க அதிபர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இவ் ஆலயம் அரசாங்க கோவில்...

யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை

இம் முறை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டாக இதைக் கருதுவதால் இதனை தடை செய்யக்கோரி பொலிஸ் நிலையங்களில் சுற்றரிக்கை வெளியிடப்பட்டமைக்கு அமைவாக குறித்த விளையாட்டினை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தடையினை...
Loading posts...

All posts loaded

No more posts