- Monday
- November 25th, 2024
வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேற்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் இருவரின் உதவியோடு சுரேஸ் பிரேமச்சந்திரனை...
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்....
யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால்...
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல திரையரங்கொன்றில் புதிதாக வந்த படமொன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. சனிக்கிழமை காலை திரைப்படத்தைப் பார்ப்பதற்காக நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தபோது...
வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். மேற்படி ஆசிரியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்காக ஆவணங்களை பரிசீலணை செய்தபோதே இவர்களின் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை...
குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வருகின்றன. சம்பவத்தின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த...
நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச...
யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சாராயக்கடையில் 18 வயது மாணவனான தனது மகன் நண்பர்களுடன் இணைந்து பதுபானம் அருந்திக்கொண்டிருப்பதை அறிந்த அரச ஊழியரான பெண் ஒருவர் சாராயக் கடைக்குள் அதிரடியாகப் புகுந்து மகனை நையப்புடைத்துள்ளார். தந்தை இல்லாத குறையை தன் மகனிற்குக் காட்டாது அவன் கல்விக்காகப் கஸ்ரப்பட்டு உழைத்துவரும் நிலையில் கூடா நட்புக்களுடன் சேர்ந்து தனது...
பருத்தித்துறை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று சனிக்கிழமை (03) அதிகாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முன் கதவினை உடைத்து அத்துமீறி நுழைந்த பருத்தித்துறைப் பொலிஸார் வீட்டிலுள்ள அனைவரையும் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர். தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அதிகாலையே மதுபோதையில் குறித்த நபரின் வீட்டுக் கதவினை அத்துமீறி உடைத்து...
முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது, மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக...
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...
இலங்கையர்களில் 80 சதவீதமானோர் 'நேரமில்லை" என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று நற்குண முன்னேற்ற அமைப்பு...
காதலித்து வந்த யுவதியை கழற்றி விட, அவருக்கு குறுஞ்செய்தி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த காதலனையும் அதற்கு உடந்தையாக இருந்த அழகுக்கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒருவரையும் பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சூட்சுமமான விசாரணை ஒன்றினை முன்னெடுத்த பிலியந்தலை பொலிஸார் இவர்களை நேற்று கைது செய்துள்ளனர்....
மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச்...
கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில்...
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார். இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில்...
சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு...
கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது...
Loading posts...
All posts loaded
No more posts