- Monday
- November 25th, 2024
கிழக்கு மாகாணத்தின் அரச திணைக்களத்தில் மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில்,...
வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம்...
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு...
சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம்...
சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய ஹ_ஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பெற்றோர் தொழிலுக்கு...
சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது....
கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு...
இளம் தாயின் சிறு தவறினால், 14 நாட்களேயான ஆண்சிசுவொன்று, பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (15) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், யாழ்ப்பாணம், நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த கபில்ராஜ் வயசன் என்ற 14 நாட்களேயான சிசு மரணமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிதாக திருமணம் முடித்த இளம் பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில்...
யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து...
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக...
தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் என்று, மொறட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி...
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது. உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு...
வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது....
நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர். இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இவ்வாறு பேருந்துகளில் ஏறி...
கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு...
வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts