யாழில் காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு!

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு காவல்துறை அதிகாரிகளும் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததும் பழைய பகை இருவருக்கிடையில் வாய்த் தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதனை அவதானித்த குறித்த விடுதி உரிமையாளர் இருவரையும் காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண...

தமிழ் பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்படும் பெரும்பான்மையின இளைஞர்கள்!

வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக...
Ad Widget

மாணவன் ஒருவனிடம் இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் பதற்றம்!

கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக்...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்...

மாணவியிடம் காதலை தெரிவித்தார் ஆசிரியர்!: பாடசாலை கல்வி செயற்பாடுகள் பாதிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம்...

முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும்...

தமிழ்நாட்டில் இருந்து கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை தருவிக்க நடவடிக்கை

மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே இதற்கு ஒரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

யாழில் திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் கைது!

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில்...

50 மணி நேரம் முத்தமிட்டு காரை பரிசாக வென்ற இலங்கை பெண்!

அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை...

சிறுபான்மையினத்தவர் மீது கொலை வெறித்தாக்குதல்

பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் விபத்தில் படுகாயம்!

உந்துருளியொன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் நேற்று பிற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வீதியில் இருந்து குறித்த மூவரும் ஒரு உந்துருளியில் தலைக்கவசம் அணியாது பயணித்துள்ளனர். குறித்த மூவரையும் கண்ட காவல்துறையினர் வீதியில் மறித்துள்ள வேளையில், நிற்காது தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள்...

மாமியார் கொடுமை தாங்க முடியாமல் மூன்று பிள்ளைகளுடன் படகில் இந்தியா சென்ற பெண்!

இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று (11) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராஜா (வயது 58) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு, கடந்த 05ஆம் திகதி குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது....

வறுமைக்கு கரம் கொடுக்கும் ‘உணவளிக்கும் கரங்கள்’

நாம் ஓர் அற்புதமான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். எம்மைச் சூழ இரு வகையானவர்கள் வலம்வருகின்றனர். ஒரு சாரார் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இன்னோர் சாரார், ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இறைவன் படைப்பில் எவ்வித நீதமும் இல்லையென்று தோன்றுகின்றதல்லவா? சவூதி மன்னர் சல்மான் 460 தொன்கள் கணமான 23000 சுகபோக பெட்டி, படுக்கைகளுடனும், 1500 பணியாட்கள்,...

நுளம்புகள் அற்றகிராமம்: முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்

பளைப் பிரதேசசெயலக பிரிவிலுள்ள முல்லையடி கிராம மக்கள் தமது கிராமத்தில் ´நுளம்புகள் அற்ற கிராமம்´ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று முன்தினம் (03.04.2017) ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது வீடுகள் மற்றும் அயல்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தமது கிராமத்தினை நுளம்புகள் அற்ற கிராமமாக மாற்றவுள்ளனர். முல்லையடியில் தத்தமது வீட்டையும்...

ரஜனிக்கு ஆதரவாக நல்லூாில் ஆா்ப்பாட்டம்!

தாம் எதற்காக அழைத்து வரப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில், வந்த சிலரால் “வடமாகாண கலைஞர்கள்” என்றப் பெயரில் , யாழ். நல்லூர் முன்றலில் பிற்பகல் 3 மணியளவில் நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், “ஈழத்து கலைஞர்கள்,...

பாடசாலையில் மது அருந்தி மயங்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அளவுக்கு மீறி மது அருந்திய 7 பாடசாலை மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே அளவுக்கு மீறிய மது போதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும் இதன்போது மதுபானத்தை பாடசாலையில் வைத்து அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் போதையில் நிலை...

ஆசிரியர்களே கவனம்! இப்படியும் ஒரு சுத்துமாத்து!

வன்னிப் பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன. நாங்கள் வடக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தில் இருந்து கதைக்கிறோம், தூரஇடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடொன்று உள்ளது. அதற்கான முடிவு திகதி இன்று.சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிளினைப் பெறவிரும்பும் ஆசிரியர்கள் உடனடியாக குறித்த கணக்கு இலக்கத்திற்கு...

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா...

 15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து?

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts