- Saturday
- January 18th, 2025
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர். இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின்...
வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற காட்சி அருகிலிருந்த வர்த்தக நிலையத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருமன்காடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகமொன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார்...
வடக்கில் உள்ள அம்மாச்சி உணவகங்களுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு...
நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20...
யாழ். நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார். இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த...
குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும்,...
பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். பொருட்களை...
வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக...
வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வங்கியில் கடந்த மாதம் 05 ஆம் திகதியன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு...
வட மாகாண அவைத்தலைவருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனத் தெரியவந்துள்ளது. அண்மையில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு சோழ மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் போன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அச்சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனவும், கடந்த 14ஆம் நாள் அமர்வில் சி.வி.கே சிவஞானம்...
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...
தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று...
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அச்சுவேலியை சேர்ந்த பிரதீபன் என்பவரே தனக்கு பொலிஸ் நிலையத்தில் வேலைவேண்டும் என போராட்டத்தில்...
கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச்...
தன் மகள் சந்தோசமா வாழுகிறாள் அவளின் வாழ்க்கை சீரழிய கூடாது. எனக்கு எந்த விதமான நஷ்ட ஈடுகளும் தேவையில்லை. என் மகள் சந்தோசமா வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் தாயார் யாழ்.மேல் நீதிமன்றில் மன்றாட்டமாக கோரினார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான...
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர்...
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின்...
Loading posts...
All posts loaded
No more posts